கொரோனா தொற்று விலக அருள்புரிவார்: மணக்குள விநாயகர் கோவிலில் - நாராயணசாமி தரிசனம் செய்தார்
புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தரிசனம் செய்தார்.
புதுச்சேரி,
விநாயகர் சதுர்த்தி விழா புதுவையில் மிகவும் எளிமையான முறையில் நேற்று கொண்டாடப்பட்டது. நேற்று காலை மணக்குள விநாயகர் கோவிலில் முதல்-அமைச்சர் நாராயணசாமி சாமி தரிசனம் செய்தார்.
அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு விதித்த தடையின் காரணமாக புதுவையில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும், ஊர்வலம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து தரப்பினரும் ஏற்று விழாவினை கொண்டாடி வருகிறார்கள்.
சக்தி வாய்ந்த மணக்குள விநாயகர் உலகம் முழுவதும் கொரோனா தொற்று விலக அருள் புரிவார். மக்கள் விரைவில் சகஜ நிலைக்கு திரும்ப வேண்டும். இதற்காக மணக்குள விநாயகரிடம் வேண்டிக்கொண்டேன். இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Related Tags :
Next Story