திருப்பத்தூர் அருகே ஏரியில் பனை விதைகள், மரக்கன்றுகள் நடவு கலெக்டர் சிவன்அருள் தொடங்கி வைத்தார்
கிராமங்கள் தோறும் சென்று ஏரி, குளம், குட்டைகளில் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். செலந்தம்பள்ளி ஏரியில் 500 பனை விதைகள் மற்றும் 250 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே செலந்தம்பள்ளி கிராமத்தில் படித்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தாய் காப்போம் அறக்கட்டளை என்ற நிறுவனத்தை தொடங்கி உள்ளனர். இதன் மூலம் கிராமங்கள் தோறும் சென்று ஏரி, குளம், குட்டைகளில் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். செலந்தம்பள்ளி ஏரியில் 500 பனை விதைகள் மற்றும் 250 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனர் எஸ்.கே.சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ரஞ்சித் வரவேற்றார். பொருளாளர் குயில் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் சிவன்அருள், ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்று செலந்தம்பள்ளி ஏரி ஓடை மேற்புறத்தில் மருத்துவக் குணங்கள் கொண்ட மரக்கன்றுகளான புங்கன், வேம்பு, அத்தி, நாவல், சொர்க்கம், செண்பகம், பாரிஜாதம், மந்தாரை, பாதம், சரக்கொன்றை, மரமல்லி ஆகியவற்றை நட்டு, பணியை தொடங்கி வைத்துப் பேசினார்கள்.
அதைத்தொடர்ந்து கால்வாய் இரு புறங்களில் 500 பனை விதைகள் நடப்பட்டன. அவர்களை பொதுமக்கள் பாராட்டினர். நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story