வியாசர்பாடியில் கூலித்தொழிலாளியை வெட்டிக் கொன்ற கும்பல் மனைவி உள்பட 6 பேர் படுகாயம்
வியாசர்பாடியில் கூலித்தொழிலாளியை 4 பேர் கும்பல் வெட்டிக் கொன்றது. தடுக்க முயன்ற அவரது மனைவி உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
பெரம்பூர்,
சென்னை வியாசர்பாடி உதயசூரியன் நகர் 3-வது பிளாக்கை சேர்ந்தவர் ராஜன் என்கிற ராஜா (வயது 43). கூலித் தொழிலாளி. இவரது மனைவி வசந்தி. மகன் சூர்யா. மகள் கோமதி. இவர்கள் நேற்று இரவு வீட்டின் வெளியே உட்கார்ந்து பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 மோட்டார்சைக்கிள்களில் 4 பேர் வந்தனர். கையில் அரிவாளுடன் வந்த அவர்கள் திடீரென ராஜனை சரமாரியாக வெட்டினார்கள்.
இதில் ராஜன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்து போனார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வசந்தி மற்றும் அவரது உறவினர்கள் தடுக்க முயன்றனர். அவர்களையும் அந்த கும்பல் வெட்டியது. இதில் வசந்தி, அவரது தாய் சாந்தி, தந்தை அருணாசலம், தம்பி சுரேஷ், சித்தப்பா தண்டபாணி மற்றும் உறவினர் சுந்தரி ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ, மோட்டார்சைக்கிள்களையும் சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்று விட்டனர்.
தகவல் அறிந்த எம்.கே.பி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்த 6 பேரையும் மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். ராஜனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா, உதவி கமிஷனர்கள் ஹரிகுமார், சுரேந்திரன் பிரகாஷ் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் குடும்பத் தகராறில் ராஜன் கொலை செய்யப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலையாளிகளை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story