கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கொரோனாவுக்கு விவசாயி பலி - விழுப்புரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரமாக உயர்வு


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கொரோனாவுக்கு விவசாயி பலி - விழுப்புரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரமாக உயர்வு
x
தினத்தந்தி 24 Aug 2020 4:00 AM IST (Updated: 24 Aug 2020 5:25 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு விவசாயி பலியானார். மேலும் விழுப்புரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 5,295 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 57 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று கொரோனாவுக்கு 54 வயது விவசாயி ஒருவர் பலியாகி இருக்கிறார். தேவபாண்டலம் கிராமத்தை சேர்ந்த இவருக்கு, கடந்த 14-ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்தபோது தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த நிலையில் நேற்று 430 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவுகள் வெளியானது. இதில் 90 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,385 ஆக அதிகரித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 5,897 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 58 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் நேற்று 500-க்கும் மேற்பட்டோருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வெளியானது. இதில் 103 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

Next Story