கட்டிக்குளம் கண்மாயில் குடிமராமத்து பணி நாகராஜன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


கட்டிக்குளம் கண்மாயில் குடிமராமத்து பணி நாகராஜன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 24 Aug 2020 3:45 AM IST (Updated: 24 Aug 2020 5:25 AM IST)
t-max-icont-min-icon

கட்டிக்குளம் கண்மாயில் குடிமராமத்து பணியை நாகராஜன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

மானாமதுரை,

மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் கண்மாய் மூலம் 9 கிராமங்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.இந்தநிலையில் இந்த கண்மாயை தூர்வார வேண்டும் என்று 9 கிராம மக்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து அரசு ரூ.96 லட்சம் ஒதுக்கியது, இதையடுத்து குடிமராமத்து பணியை மானாமதுரை எம்.எல்.ஏ. நாகராஜன் தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய செயலாளர்கள் ஜெயபிரகாஷ், சிவசிவ ஸ்ரீதரன், பாசன சங்க தலைவர் ராமகிருஷ்ணன், ஊராட்சி ஒன்றிய தலைவர் லதாஅண்ணாத்துரை, முன்னாள் ஊராட்சி தலைவர் தமிழ் நேசன், ஒன்றிய கவுன்சிலர் அண்ணாத்துரை, நீர் மேலாண்மை குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், அ.தி.மு.க. நிர்வாகிகள் பாலா, தமிழ்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Next Story