காவேரிப்பாக்கம், ராணிப்பேட்டை பகுதியில் - 35 பேருக்கு கொரோனா
காவேரிப்பாக்கம், ராணிப்பேட்டை பகுதியில் 35 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
காவேரிபாக்கம்,
காவேரிப்பாக்கம் வட்டார பகுதியில் மங்கலம் பிள்ளையார் கோவில் தெரு, சிறுகரும்பூர் புதிய தெரு, ராமாபுரம் திருவள்ளூர் தெருவில் தலா ஒருவர் மற்றும் காவேரிப்பாக்கம், வேகாமங்கலம் மேட்டு தெருவில் தலா 2 பேர் என மொத்தம் 7 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ராணிப்பேட்டை, சீனிவாசன்பேட்டையில் உள்ள காமராஜர் தெருவில் 2 பேர், குவார்ட்டர்ஸ் தெரு, திருத்தணி ரோடு, நவல்பூர் தண்டலம் ரோடு, எம்.பி.டி.ரோடு, மணியக்கார தெரு, அம்மூர் ரோடு டீச்சர்ஸ் காலனி, ராணிப்பேட்டை ஏரிக்கரை 3-வது தெரு, காரை காட்டன் பஜார் தெரு, நேதாஜி தெரு, மாந்தாங்கல் மாரியம்மன் கோவில் தெரு, திரவுபதியம்மன் கோவில் தெரு, காந்திநகர் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் என மொத்தம் 14 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிப்காட், புளியங்கண்ணு புதிய தெரு, பெல் டவுன்ஷிப்பில் தலா 2 பேர் மற்றும் நேதாஜி நகர் 4-வது தெரு, எஸ்.ஆர்.பி.ஆபிசர்ஸ் காலனி, புதிய அக்ராவரம், சீக்கராஜபுரம் ஈஸ்வரன் கோவில் தெரு, சேர்க்காடு நாயுடு தெருவில் தலா ஒருவர் என 9 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
அம்மூர் பஜார் தெரு, பச்சையம்மன் கோவில் தெரு, பஜனை கோவில் தெரு, இந்திரா நகர், வேலம் அருந்ததியர் தெருவில் தலா ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story