திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது - 54 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது. 54 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் தினமும் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வந்து கொண்டிருக்கிறது. நேற்று ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,020 ஆக உயர்ந்துள்ளது.
அதன்படி காங்கேயம் பச்சம்பாளையத்தை சேர்ந்த 21 வயது பெண், திருப்பூர் காவேரி தெருவை சேர்ந்த 30 வயது பெண், ஓடக்காட்டை சேர்ந்த 74 வயது ஆண், 70 வயது பெண், குண்டடம் நால்ரோட்டை சேர்ந்த 43 வயது பெண், காமாட்சிநகரை சேர்ந்த 50 வயது பெண், வெள்ளகோவில் சேனாதிபாளையத்தை சேர்ந்த 75 வயது பெண், நத்தக்காடையூரை சேர்ந்த 42 வயது பெண், அவினாசி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்க்கும் பெருமாநல்லூர் சென்னியப்பன்நகரை சேர்ந்த 33 வயது ஆண், கேத்தனூர் நெசவாளர்காலனியை சேர்ந்த 28 வயது ஆண், 56 வயது ஆண்.
பெருமாநல்லூர் நியூ திருப்பூரை சேர்ந்த 24 வயது ஆண், அருள்புரத்தை சேர்ந்த 62 வயது பெண், கரட்டாங்காட்டை சேர்ந்த 50 வயது ஆண், பல்லடத்தை சேர்ந்த 19 வயது பெண், ஊத்துக்குளியை சேர்ந்த 69 வயது ஆண், ஜெய்நகரை சேர்ந்த 59 வயது ஆண், காமராஜர்நகரை சேர்ந்த 43 வயது ஆண், திருநீலகண்டபுரத்தை சேர்ந்த 58 வயது பெண், கணக்கம்பாளையத்தை சேர்ந்த 38 வயது பெண், ஊத்துக்குளி ரோட்டை சேர்ந்த 39 வயது பெண், காந்திநகரை சேர்ந்த 24 வயது பெண்.
சந்திராபுரம் இந்திராகாலனியை சேர்ந்த 38 வயது ஆண், போயம்பாளையத்தை சேர்ந்த 48 வயது ஆண், செவந்தாம்பாளையத்தை சேர்ந்த 48 வயது ஆண், காலேஜ்ரோட்டை சேர்ந்த 48 வயது ஆண், செல்லம்நகரை சேர்ந்த 50 வயது ஆண், பொன்னாபுரத்தை சேர்ந்த 37 வயது ஆண், ஜீவாகாலனியை சேர்ந்த 35 வயது ஆண், போயம்பாளையத்தை சேர்ந்த 60 வயது ஆண், 61 வயது ஆண், 27 வயது ஆண், வெள்ளியங்காட்டை சேர்ந்த 36 வயது பெண், ஆண்டிபாளையத்தை சேர்ந்த 27 வயது ஆண்.
ஜெய்நகரை சேர்ந்த 39 வயது ஆண், நியூ திருப்பூரை சேர்ந்த 20 வயது ஆண், திருப்பூரை சேர்ந்த 50 வயது ஆண், உடுமலை அப்பாவுதெருவை சேர்ந்த 60 வயது ஆண், உடுமலையை சேர்ந்த 13 வயது சிறுவன், லட்சுமிநகரை சேர்ந்த 72 வயது ஆண், தொட்டிபாளையத்தை சேர்ந்த 48 வயது ஆண், திருப்பூர் கேப்டன்நகரை சேர்ந்த 22 வயது பெண், கணியூர் கொழுமத்தை சேர்ந்த 10 வயது சிறுவன், குப்பண்ண செட்டியார் தெருவை சேர்ந்த 28 வயது பெண், 15 வேலம்பாளையத்தை சேர்ந்த 26 வயது பெண், அம்மன்நகரை சேர்ந்த 33 வயது ஆண், காரத்தொழுவு பகுதியை சேர்ந்த 60 வயது பெண், முருகநாதபுரத்தை சேர்ந்த 39 வயது ஆண், திருச்சி ரோட்டை சேர்ந்த 25 வயது பெண், பாண்டியன்நகரை சேர்ந்த 60 வயது ஆண்.
பிச்சம்பாளையத்தை சேர்ந்த 30 வயது ஆண், செங்குட்டுவன் தெருவை சேர்ந்த 38 வயது ஆண், மங்கலத்தை சேர்ந்த 50 வயது ஆண், சுப்பிரமணியன்நகரை சேர்ந்த 50 வயது ஆண், பெரியார்காலனியை சேர்ந்த 37 வயது ஆண், 34 வயது ஆண், பெருமாநல்லூரை சேர்ந்த 29 வயது ஆண், எஸ்.வி. காலனியை சேர்ந்த 38 வயது ஆண், மங்கலத்தை சேர்ந்த 57 வயது ஆண், ஆண்டிபாளையத்தை சேர்ந்த 70 வயது பெண், சென்னிமலைப்பாளையத்தை சேர்ந்த 55 வயது பெண், இந்திராநகரை சேர்ந்த 56 வயது ஆண்.
மண்ணரையை சேர்ந்த 73 வயது ஆண், புஷ்பாநகரை சேர்ந்த 43 வயது பெண், காந்திநகர் ஏ.வி.பி. லே அவுட்டை சேர்ந்த 62 வயது ஆண், அமராவதிநகரை சேர்ந்த 73 வயது ஆண், அனுப்பர்பாளையம்புதூரை சேர்ந்த 53 வயது ஆண், பெரியாண்டிபாளையத்தை சேர்ந்த 49 வயது பெண், சின்னவீரன்பட்டியை சேர்ந்த 23 வயது பெண், திருப்பூரை சேர்ந்த 39 வயது ஆண், கணியூரை சேர்ந்த 48 வயது ஆண், கே.செட்டிபாளையத்தை சேர்ந்த 41 வயது பெண்.
தாராபுரத்தை சேர்ந்த 57 வயது ஆண், பழங்கரையை சேர்ந்த 55 வயது பெண், வெள்ளியம்பாளையத்தை சேர்ந்த 63 வயது ஆண் ஆகிய 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு தற்போது மேல்சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 20-ஆக உயர்ந்துள்ளது.இதற்கிடையில் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் 54 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். 629 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Related Tags :
Next Story