சேத்தூர் அருகே, தொழிலாளி வெட்டிக்கொலை


சேத்தூர் அருகே, தொழிலாளி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 25 Aug 2020 10:15 AM IST (Updated: 25 Aug 2020 10:10 AM IST)
t-max-icont-min-icon

சேத்தூர் அருகே தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

தளவாய்புரம், 

விருதுநகர் மாவட்டம் சேத்தூர் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் வடகாசி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது 33). இவர் அங்குள்ள செங்கல்சூளையில் விறகு வெட்டும் தொழில் செய்து வந்தார்.

இவருக்கு மனைவியும், 8 வயதில் மகனும் உள்ளனர். தற்போது இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வடகாசி அம்மன் கோவில் அருகே இசக்கிமுத்துவிற்கும், அதே பகுதியை சேர்ந்த மாடசாமி (30) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது திடீரென மாடசாமி, இசக்கிமுத்துவை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே இசக்கிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் சேத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாடசாமியை பிடித்து விசாரணை நடத்தினர்.

முதல் கட்ட விசாரணையில் முன்பகை காரணமாக மாடசாமி, இசக்கிமுத்துவை கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடசாமியை கைது செய்ததுடன், கொலைக்கு பயன்படுத்திய அரிவாளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து சொக்கநாதன்புத்தூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story