ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சமாக ஒரேநாளில் 189 பேருக்கு கொரோனா


ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சமாக ஒரேநாளில் 189 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 25 Aug 2020 12:52 PM IST (Updated: 25 Aug 2020 12:52 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 189 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஈரோடு, 

சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் இன்று உலக மக்கள் அனைவரையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த வைரசால் தினந்தோறும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் 2-ம் அலை வீச தொடங்கியபோது 10 பேர், 20 பேர் என கொரோனா தொற்று இருந்தது.

இதைத்தொடர்ந்து மெல்ல மெல்ல அதிகரித்து தினந்தோறும் 50-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்தனர். பின்னர் 100-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சமாக உள்ளது.

இதுதவிர 8 பேர் ஈரோடு மாவட்ட பட்டியலில் இருந்து நேற்று நீக்கப்பட்டு உள்ளனர். இதனால் ஏற்கனவே 2 ஆயிரத்து 63 பேர் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை நேற்று 2 ஆயிரத்து 252 ஆக உயர்ந்தது.

நேற்று புதிதாக ஈரோடு மாநகராட்சி பகுதியில் மட்டும் 85 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதுதவிர பவானிசாகர் பகுதியில் 14 பேருக்கும், பெருந்துறை பகுதியில் 13 பேருக்கும், சத்தியமங்கலம் பகுதியில் 13 பேருக்கும், கோபி பகுதியில் 11 பேருக்கும், தாளவாடி பகுதியில் 10 பேருக்கும், மொடக்குறிச்சி பகுதியில் 9 பேருக்கும், டி.என்.பாளையத்தில் 7 பேருக்கும், சித்தோடு பகுதியில் 5 பேருக்கும், அந்தியூர் பகுதியில் 5 பேருக்கும், பவானி பகுதியில் 3 பேருக்கும், கொடுமுடி பகுதியில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் சேர்க்கப்பட்டனர். மேலும் நாமக்கல் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 13 பேர் ஈரோடு மாவட்ட பட்டியலில் நேற்று சேர்க்கப்பட்டு உள்ளனர்.

அதே நேரம் நேற்று ஒரே நாளில் 65 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு சென்று உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,003 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 32 பேர் இறந்துள்ள நிலையில், 1,217 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

Next Story