தூத்துக்குடியில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்


தூத்துக்குடியில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 26 Aug 2020 3:15 AM IST (Updated: 25 Aug 2020 11:53 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

போராட்டத்துக்கு தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜெயமுருகன் ஆகியோர் தலைமை தாங்கினர். பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட உதவி செயலாளர் பால்ராஜ் பட்டுக்குமார், கிளை செயலாளர் அரிராமச்சந்திரன் ஆகியோர் பேசினர்.

போராட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஒரு வருடமாக நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்க கூடாது, இ.பி.எப், இ.எஸ்.ஐ உள்ளிட்ட சட்ட சலுகைகளை முறையாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

போராட்டத்தில் ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story