செங்கோட்டை, சங்கரன்கோவில், பாபநாசத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
செங்கோட்டை, சங்கரன்கோவில், பாபநாசத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
செங்கோட்டை,
செங்கோட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நெல்லை மண்டலம் செங்கோட்டை கிளை அனைத்து போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக அரசு அறிவித்துள்ள போக்குவரத்துக் கழகத்தில் 255-ஏ விதியை திரும்ப பெற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஐ.என்.டி.யு.சி. கிளைத்தலைவர் ரெங்கநாதன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மத்திய சங்க துணை செயலாளர் பழனிக்குமாரசாமி, எல்.பி.எப். கிளை செயலாளர் முத்துபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. நிர்வாக குழு உறுப்பினர் திருமலைக்குமாரசாமி, பணிமளை பொறுப்பாளர் பசுபதி, எல்.பி.எப். பொருளாளர் தமிழ்செல்வன், ஐ.என்.டி.யு.சி. பொருளாளர் சிவமுருகன் ஆகியோர் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி பேசினர்.
இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாநிலக்குழு உறுப்பினர் வேல்மயில், வட்டார தலைவர் வன்னியபெருமாள், எல்.பி.எப். உறுப்பினர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சி.ஐ.டி.யு. கிளை தலைவர் சிவக்குமார் நன்றி கூறினார்.
சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. மண்டல அமைப்பு செயலாளர் மைக்கேல்நெல்சன் தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யு. ஸ்டாலின், தொ.மு.ச. நிர்வாகிகள் அய்யலுசாமி, சங்கர்ராஜ், டி.டி.எஸ்.எப். முருகன், ஐ.என்.டி.யு.சி. அரசய்யா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதேபோல் பாபநாசம் பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story