மொத்த விற்பனை கடை ஊழியரை கடத்தி: ரூ.26 லட்சத்தை கொள்ளையடித்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது - உறவினரும் சிக்கினார்
பெங்களூருவில், மொத்த விற்பனை கடை ஊழியரை கடத்தி ரூ.26 லட்சத்தை கொள்ளையடித்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரையும், அவருடைய உறவினரையும் போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு,
துமகூரு மாவட்டம் குப்பியை சேர்ந்தவர் மோகன். இவர் கொப்பரை தேங்காய், பாக்கு, புளியை மொத்தமாக வியாபாரம் செய்யும் கடை நடத்தி வருகிறார். மோகனிடம் பெங்களூருவை சேர்ந்த வியாபாரிகளும் கொப்பரை தேங்காய், பாக்கு, புளியை கொள்முதல் செய்து வருகின்றனர்.
பின்னர் வாரத்திற்கு ஒருநாள் மோகன் பெங்களூருவுக்கு வந்து வியாபாரிகளிடம் பணம் வசூலித்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி மோகன் தன்னிடம் வேலை செய்யும் ஊழியர்களான சிவக்குமார சுவாமி, தர்ஷன் ஆகியோரை வியாபாரிகளிடம் இருந்து பணம் வசூலித்து வரும்படி பெங்களூருவுக்கு அனுப்பி இருந்தார். இதையடுத்து காரில் பெங்களூருவுக்கு வந்த சிவக்குமார சுவாமி, தர்ஷன் ஆகியோர் சிக்பேட்டை பகுதியில் வியாபாரிகளிடம் இருந்து ரூ.26 லட்சத்தை வசூல் செய்து உள்ளனர். பின்னர் மோகனுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சிவக்குமார சுவாமியும், தர்ஷனும் பேசி உள்ளனர். அப்போது பணம் வசூலித்து விட்டதாகவும், குப்பிக்கு புறப்பட்டு விட்டதாகவும் கூறி உள்ளனர். பின்னர் மோகன், இன்னொரு வியாபாரி ரூ.2 லட்சம் தர வேண்டி உள்ளது. அதையும் வாங்கி கொண்டு வாருங்கள் என்று கூறியுள்ளார்.
இதனால் சிவக்குமார சுவாமியும், தர்ஷனும் சிக்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே காரை நிறுத்திவிட்டு, வியாபாரிக்காக காத்து இருந்தனர். அப்போது அங்கு போலீஸ் சீருடை அணிந்த நபர் உள்பட 3 பேர் வந்தனர். அப்போது போலீஸ் உடை அணிந்த நபர் காரை தடைசெய்யப்பட்ட பகுதியில் நிறுத்தி உள்ளதாக கூறியுள்ளார். மேலும் காருக்குள் 2 பேர் ஏறி உள்ளனர். அவர்கள் சிவக்குமார சுவாமியை காரை ஓட்ட கூறினர். அவரும் காரை ஓட்டினார். அந்த காரை போலீஸ் சீருடை அணிந்தவர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்று உள்ளார்.
இந்த நிலையில் யூனிட்டி பில்டிங் பகுதியில் சென்றபோது போலீஸ் சீருடையில் வந்தவர் காரை நிறுத்த கூறினார். பின்னர் காரில் பையில் இருந்த ரூ.26 லட்சத்தை, போலீஸ் சீருடை அணிந்த நபர் உள்பட 3 பேரும் சேர்ந்து இன்னொரு காருக்கு மாற்றினர். அதையடுத்து காரை போலீஸ் நிலையத்தை நோக்கி ஓட்ட சொல்லி உள்ளனர். இதனால் சிவக்குமார சுவாமியும், தர்ஷனும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் 2 பேரின் செல்போன்களையும், ரூ.26 லட்சத்தையும் 3 பேரும் கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து சிவக்குமார சுவாமி, சிட்டி மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் மர்மநபர்களை பிடிக்க உதவி போலீஸ் கமிஷனர் தர்மேந்திரா, இன்ஸ்பெக்டர் குமாரசாமி ஆகியோர் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டு இருந்தது.
தனிப்படை போலீசார் கொள்ளை தொடர்பாக தீவிரமாக விசாரித்து வந்தனர். விசாரணையில் எஸ்.ஜே.பார்க் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் ஜீவன்குமார் தாமஸ்(வயது 31), மற்றும் அவரது உறவினர் ஞானபிரகாஷ்(44) ஆகியோர் தான் சிவக்குமார சுவாமி, தர்ஷனிடம் இருந்து ரூ.26 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதனால் அவர்கள் 2 பேரையும் சிட்டி மார்க்கெட் போலீசார் கைது செய்தனர். கைதான ஞானபிரகாஷ் கன்னட பத்திரிகை ஒன்றில் நிருபராகவும், மனித உரிமை அமைப்பின் மாநில தலைவராகவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சஞ்சீவ் பாட்டீல் கூறும்போது, “குப்பியை சேர்ந்த கிஷோர் என்பவருக்கும் ஜீவன்குமார், ஞானபிரகாசுக்கும் இடையே பழக்கம் இருந்து உள்ளது. பெங்களூருவில் உள்ள வியாபாரிகளிடம் பெரிய தொகையை வசூலிக்க மோகன் தனது ஊழியர்களை அனுப்பி வைத்து உள்ளதாக கிஷோர் தான் தகவல் கொடுத்து உள்ளார். இதையடுத்து தான் சிவக்குமார சுவாமியையும், தர்ஷனையும் காரில் கடத்தி சென்று ரூ.26 லட்சத்தை கொள்ளையடித்து சென்று உள்ளனர். கிஷோரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்.
மொத்த விற்பனை கடை ஊழியர்களை கடத்தி ரூ.26 லட்சத்தை சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் கொள்ளையடித்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீருடையில் கொள்ளையை அரங்கேற்றிய ஜீவன்குமார்:
மொத்த விற்பனை கடை ஊழியர்களை கடத்தி ரூ.26 லட்சத்தை கொள்ளையடித்தாக பெங்களூரு எஸ்.ஜே.பார்க் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜீவன்குமார் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் பணியில் இருந்தபோது தான் சீருடை அணிந்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்த ஜீவன்குமார் சரியாக வேலை பார்க்கவில்லை என்று உயர் அதிகாரிகளுக்கு அடிக்கடி குற்றச்சாட்டுகள் சென்றன. சமீபத்தில் கூட புகார் கொடுக்க சென்றால் ஜீவன்குமார் மதிப்பு அளிப்பது இல்லை என்று அவருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி இருந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் பொய் வழக்குப்பதிவு செய்து உள்ளே தள்ளி விடுவேன் என்று ஜீவன்குமார் எச்சரித்து இருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
கண்டக்டராக இருந்து பத்திரிகையாளராக மாறிய ஞானபிரகாஷ்: ஜீவன்குமாருடன், பத்திரிகை நிருபரான ஞானபிரகாஷ் என்பவரையும் இந்த கொள்ளை வழக்கில் சிட்டி மார்க்கெட் போலீசார் கைது செய்து உள்ளனர். கடந்த 2006-ம் ஆண்டு ஞானபிரகாஷ் கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் உப்பள்ளி போக்குவரத்து பணிமனையில் டிரைவர்-கண்டக்டராக வேலை பார்த்தார். பின்னர் அவர் விதான சவுதாவில் அரசு அதிகாரிகளுக்கு கார் ஓட்டினார். அதையடுத்து விருப்ப ஓய்வுபெற்ற அவர் நீதித்துறையிலும் பணியாற்றி உள்ளார். தற்போது ஒரு பத்திரிகையின் நிருபராகவும், மனித உரிமை அமைப்பின் மாநில தலைவராகவும் இருந்து உள்ளார். இந்த நிலையில் தான் அவர் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவன்குமாருடன் சேர்ந்து கொள்ளையை அரங்கேற்றி உள்ளார். ஞானபிரகாசின் உறவுக்கார பெண்ணை தான் ஜீவன்குமார் திருமணம் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story