குண்டும் குழியுமான திரு-பட்டினம் புறவழிச்சாலை வாகன ஓட்டிகள் அவதி
மும்மத வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் திரு-பட்டினம் புறவழிச்சாலை பழுதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
காரைக்கால்,
காரைக்கால் முதல் நாகப்பட்டினம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக திரு-பட்டினம் புறவழிச்சாலை உள்ளது. நாகூர், வேளாங்கண்ணி, திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆகிய மும்மத வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் போக்குவரத்து மிக்க சாலைகளில் இது முதன்மையானதாகும்.
மத்திய அரசு நிதியில் ரூ.12 கோடி செலவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த சாலை போடப்பட்டது. ஆனால் சாலை அமைத்த சில நாட்களிலேயே பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளம் உடனடியாக சரிசெய்யப்பட்டது. இருப்பினும் இந்த சாலையில் அதிகளவில் கனரக வாகனங்கள் செல்வதால் மீண்டும் பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டது. இது நாளடைவில் பெரிதாக மாறியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
சாலை அமைக்கும்போது மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள் முறையான ஆய்வுகள் செய்யாமல் போனதாலும், பின்னர் மாவட்ட நிர்வாகம் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணியை மேற்கொள்ளாததாலும் தற்போது சாலையின் பெரும்பகுதி மரண பள்ளங்களாக காட்சி அளிக்கிறது.
இந்த சாலையில் மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் பயணம் செய்வது என்பது வாகன ஓட்டிகளுக்கு கடும் சவாலாகவே உள்ளது. தினந்தோறும் ஏதாவது ஒரு விபத்து நடக்கும் வகையில் சாலையின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஆளும் காங்கிரஸ் அரசில் கூட்டணியாக அங்கம் வகிக்கும் தொகுதி எம்.எல்.ஏ (தி.மு.க.) இந்த சாலை குறித்து இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கேள்விக்குறியாக உள்ளது.
இது குறித்து பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை புகார் செய்தும், எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று கூறப்படுகிறது. நாளுக்கு நாள் சாலையில் பள்ளங்களும், விபத்துகளும் அதிகரித்து வருவதால் இதுபற்றி மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story