சிகிச்சை மையத்தில் பணியாற்றி வந்தவர்: கொரோனா தொற்றுக்கு கிராம நிர்வாக அதிகாரி சாவு
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை மையத்தில் பணியாற்றி வந்த கிராம நிர்வாக அதிகாரி கொரோனா தொற்றுக்கு பலியானார்.
ஸ்ரீபெரும்புதூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஆற்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 54). இவர் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மேவலூர் குப்பம் பகுதி கிராம நிர்வாக அதிகாரியாக வேலை செய்து வந்தார். ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் செயல்படும் கொரோனா சிகிச்சை மையத்தில் பணியாற்றி வந்த மோகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி மோகன் பரிதாபமாக இறந்தார். ஏற்கனவே கொரோனா பாதிப்பில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் 2 கிராம நிர்வாக அலுவலர்கள், ஒரு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story