புழல் சிறை அருகே கார் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
செங்குன்றத்தில் இருந்து சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் புழல் சிறை அருகே சென்று கொண்டிருந்தார்.
செங்குன்றம்,
சென்னையை அடுத்த புழல் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ஜான் (வயது 50). நேற்று இவர் தனது காரில் செங்குன்றத்தில் இருந்து சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் புழல் சிறை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக காரின் முன்பகுதி திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியதால் நடுரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் பதற்றமடைந்த ஜான், உடனே காரில் இருந்து இறங்கினார். உடனே இது குறித்து அவர் செங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெயச்சந்திரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் எரிந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் காரின் முன்பகுதி முற்றிலும் எரிந்து சேதமானது. இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story