நட்சத்திர ஓட்டலில் கல்லூரி மாணவர்கள் கைதான வழக்கில்: கஞ்சா கடத்தல் கும்பல் தலைவன் உள்பட மேலும் 8 பேர் கைது - வாட்ஸ்-அப் மூலம் விற்பனை செய்தது அம்பலம்
விருகம்பாக்கத்தில் நட்சத்திர ஓட்டலில் தங்கி கஞ்சா விற்பனை செய்ததாக கல்லூரி மாணவர்கள் கைதான வழக்கில் கஞ்சா கடத்தல் கும்பல் தலைவன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
பூந்தமல்லி,
விருகம்பாக்கம், பொன்னியம்மன் கோவில் தெருவில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் சந்தேகத்திற்கிடமாக சிலர் தங்கி இருப்பதாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து ஓட்டலில் தங்கியிருந்த 6 கல்லூரி மாணவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்ததை அடுத்து வளசரவாக்கத்தை சேர்ந்த பிரித்திவிராஜ் (வயது 22), மதுரவாயலை சேர்ந்த எழிலரசன் (22), ராகுல் (22), உபயதுல்லா (22), டேவிட் பிராங்கிளின் (21) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களுக்கு கஞ்சா வினியோகம் செய்தது யார்? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.
பிடிபட்டவர்கள் அளித்த தகவலின் பேரில், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தப்பட்டு வந்து வினியோகம் செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த கஞ்சா கும்பலின் தலைவனான ஐசக் என்பவனை ஆந்திராவில் வைத்து போலீசார் கைது செய்தனர். இது குறித்து விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தியாகராயநகர் துணை கமிஷனர் அரிகிரண் பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையைச் சேர்ந்த பிரித்விராஜ் என்பவர் அவரது நண்பர்களுடன் புதுச்சேரி மாநிலம் சென்று நட்சத்திர ஓட்டலில் தங்கியபோது, அங்கிருந்த ஐசக்குடன் அவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அப்போது அவர்களிடம் நட்பு வட்டாரத்தில் கஞ்சா புகைக்கும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு கஞ்சா வினியோகம் செய்ய முடியுமா? என்று ஐசக் கேட்டுள்ளார். இதையடுத்து கஞ்சா விற்று பணம் சம்பாதிக்கலாம் என்ற நோக்கத்தில் ஐசக் மூலமாக ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்க முடிவு செய்தனர். பிரித்விராஜ் கூட்டாளிகளின் நண்பரான அரிபாபு என்பவரின் உறவினர் ஆந்திராவில் இருந்து காய்கறி லோடு ஏற்றி வருவதால் அவரது வாகனம் மூலம் கஞ்சாவை அடிக்கடி சென்னைக்கு கடத்தி வந்துள்ளனர்.
அதன் பின்னர் கஞ்சாவை வரவழைத்து ஓட்டல்களில் அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கி அங்கிருந்து அதற்கென்று ஒரு வாட்ஸ்-அப் குழுவை அமைத்து அதன் மூலம் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இது தொடர்பான வழக்கில் கடத்தல் கும்பல் தலைவனான ஆந்திராவை சேர்ந்த நூதாக்கி ஐசக் (24), அப்துல் ரசாக் (21), யுவராஜ் (22), விஜய் (22), பிரசாத் (22), சாய் சுதன் (21), அரி விக்னேஷ் (20), ஹரிபாபு (24) ஆகிய மேலும் 8 பேர் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து மொத்தம் 18 கிலோ கஞ்சா, இரண்டு மோட்டார் சைக்கிள்கள், எடை எந்திரங்கள், ரூ.6 ஆயிரம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story