தூத்துக்குடி அருகே பொட்டல்காட்டில் மாற்றுப்பாதையில் எரிவாயு குழாய் பதிக்க வேண்டும் - ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்


தூத்துக்குடி அருகே பொட்டல்காட்டில் மாற்றுப்பாதையில் எரிவாயு குழாய் பதிக்க வேண்டும் - ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 27 Aug 2020 3:45 AM IST (Updated: 27 Aug 2020 12:27 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே பொட்டல்காட்டில் மாற்றுப்பாதையில் எரிவாயு குழாய் பதிக்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஸ்பிக்நகர்,

தூத்துக்குடி அருகே உள்ள பொட்டல்காடு கிராமத்தில் எரிவாயு குழாய் அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டதால் பொட்டல்காடு கிராமத்தில் உள்ள சந்தணமாரியம்மன் கோவில் வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஊர்த்தலைவர் செல்வசேகர் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் எரிவாயு குழாய் பதிக்கும் பணியை ஊருக்கு சற்று தொலைவில் பதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மீண்டும் அதே பகுதியில் பணிகளைத் தொடர்ந்தால், தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் தி.மு.க விவசாய அணி அமைப்பாளரும் ஒன்றிய கவுன்சிலருமான ஆஸ்கர், மள்ளர் பேரவை தலைவர் சுபாஷினி, நாம் தமிழர் கட்சி மகளிரணி மாவட்ட செயலாளர் அன்னலட்சுமி, முள்ளக்காடு முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வளர்மதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story