மலிவு விலை ‘ஹெட்செட்’ வாங்க சமூக இடைவெளி இன்றி குவிந்த மக்கள் நெல்லையில் செல்போன் கடைக்கு ‘சீல்’ வைப்பு
நெல்லையில் மலிவு விலை ‘ஹெட்செட்‘, ‘டெம்பர் கிளாஸ்‘ வாங்குவதற்காக, மக்கள் சமூக இடைவெளி இன்றி செல்போன் கடையில் குவிந்தனர். இதையடுத்து அந்த செல்போன் கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
நெல்லை,
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனினும் அவ்வப்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கவும், அத்தியாவசிய தேவைகளுக்கு செல்கிறவர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நெல்லை சந்திப்பு பகுதியில் பிரபல செல்போன் கடையின் புதிய கிளை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு செல்போனின் ‘ஹெட்செட்‘, ‘டெம்பர் கிளாஸ்‘ ஆகியவை மலிவு விலையில் அதாவது ரூ.6-க்கு விற்பதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று காலையில் அந்த செல்போன் கடையில் மக்கள் கூட்டம் குவியத் தொடங்கியது. கடையின் முன்பாக ஏராளமானவர்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றனர். சமூக இடைவெளி இன்றி மக்கள் நெருக்கமாக முண்டியடித்தவாறு கடைக்குள் சென்று, ரூ.6-க்கு ‘ஹெட்செட்‘, ‘டெம்பர் கிளாஸ்‘ ஆகியவற்றை வாங்கி சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவின்பேரில், தச்சநல்லூர் மண்டல உதவி ஆணையாளர் அய்யப்பன், சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் இளஞ்செழியன் மற்றும் அதிகாரிகள், அந்த செல்போன் கடைக்கு விரைந்து சென்று, கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அந்த செல்போன் கடையில் இருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்களை வெளியேற்றி விட்டு, கடையை பூட்டி ‘சீல்’ வைத்தனர். இதுதொடர்பாக செல்போன் கடையின் ஊழியர்கள் 5 பேர் மீது நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story