நடுக்கடலில் மீன்பிடித்தபோது வேதாரண்யம் மீனவர்களின் வலைகளை அறுத்துச்சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள்


நடுக்கடலில் மீன்பிடித்தபோது வேதாரண்யம் மீனவர்களின் வலைகளை அறுத்துச்சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள்
x
தினத்தந்தி 27 Aug 2020 5:00 AM IST (Updated: 27 Aug 2020 5:00 AM IST)
t-max-icont-min-icon

நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்தபோது வேதாரண்யம் மீனவர்களின் வலைகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் அறுத்து எடுத்து சென்றனர்.

வேதாரண்யம், 

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையில் இருந்து நேற்று முன்தினம் மதியம் சிவக்குமார்(வயது 30) தனக்கு சொந்தமான படகில் தந்தை சின்னத்தம்பி(65), அண்ணன் சிவா(32) மற்றும் அதே ஊரைச்சேர்ந்த முருகன் ஆகியோருடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.

கோடியக்கரைக்கு தென்கிழக்கே தமிழக எல்லையில் அவர்கள் மீன் பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது ஒரு படகில் இலங்கை கடற் கொள்ளையர்கள் அங்கு வந்தனர். அவர்கள் சிவக்குமார் உள்பட 4 மீனவர்களையும் மிரட்டியதுடன் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டு இருந்த வலைகளை அறுத்து எடுத்துச் சென்று விட்டனர்.

இலங்கை கடற்கொள்ளையர்கள் அறுத்து எடுத்துச்சென்ற வலைகள் 100 கிலோ எடை கொண்டதாகும். இதன் மதிப்பு ரூ.20 ஆயிரம் ஆகும். வலைகளை இழந்த மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் நேற்று காலை ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர். பின்னர் நடந்த சம்பவம் குறித்து மீனவ கிராம பஞ்சாயத்தாரிடம் தெரிவித்தனர்.

இலங்கை கடற் கொள்ளையர்கள் மீனவர்களை மிரட்டி வலையை அறுத்து எடுத்துச்சென்ற சம்பவம் ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story