காயல்பட்டினத்தில் ரூ.75 லட்சத்தில் கட்டப்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கனிமொழி எம்.பி. பார்வையிட்டார்


காயல்பட்டினத்தில் ரூ.75 லட்சத்தில் கட்டப்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கனிமொழி எம்.பி. பார்வையிட்டார்
x
தினத்தந்தி 28 Aug 2020 4:00 AM IST (Updated: 27 Aug 2020 10:47 PM IST)
t-max-icont-min-icon

காயல்பட்டினம் கோமான்புதூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டினார். தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை கனிமொழி எம்பி. பார்வையிட்டார்.

ஆறுமுகநேரி,

காயல்பட்டினம் கோமான் தெரு மொட்டையார் பள்ளிவாசல் அருகே ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது உள்ளூர் வளர்ச்சி நிதியிலிருந்து காயல்பட்டினம் கோமான்புதூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டினார். தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை கனிமொழி எம்பி. பார்வையிட்டார். பொதுப்பணி துறையின் சார்பில் கட்டப்படும் அந்த கட்டிட பணிகளை துறை அதிகாரிகளிடம் கேட்டு ஆய்வு செய்தார் மேலும் கட்டிடத்தின் உள்ளே கட்டப்படும் சுவர்கள், அதன் தளங்கள் பற்றி பொறியாளரிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

தி.மு.க. தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், காயல்பட்டினம் நகர செயலாளர் முத்து முகமது, துணை செயலாளர்கள் கதிரவன், லேன்ட் மம்மி, பொதுக்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, முன்னாள் நகரசபை கவுன்சிலர் சுகு, பொதுப்பணித்துறை அதிகாரிகள், நகரசபை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கோமான் தெரு பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் கனிமொழி எம்.பி.க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளிவாசல் தலைவர் கோஸ் முகமது மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் காயல்பட்டினம் அனைத்து சமுதாய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சலீம், துணை ஒருங்கிணைப்பாளர் கண்ணன் ஆகியோர், கூட்டமைப்பின் ஆண்டு மலரை கனிமொழி எம்.பி.யிடம் கொடுத்தனர். தொடர்ந்து உடல்நலக்குறைவால் வீட்டில் இருக்கும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் காதரை, கனிமொழி எம்.பி. அவரது இல்லத்திற்கு சென்று பார்த்து உடல்நலம் விசாரித்தார்.

Next Story