ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால்: ஆண்டுக்கு 3 மில்லியன் டன் சரக்கு கையாளுதல் பாதிப்பு - துறைமுக சரக்கு கையாளுவோர் சங்க தலைவர் பேட்டி
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், ஆண்டுக்கு 3 மில்லியன் டன் சரக்கு கையாளுதல் பாதிக்கப்பட்டு உள்ளது என்று தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக சரக்கு கையாளுவோர் சங்க தலைவர் வேல் சங்கர் கூறினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் அருகே உள்ள சங்க அலுவலகத்தில் வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் கடந்த 3 மாதத்தில், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இறக்குமதியில் 15 சதவீதமும், ஏற்றுமதியில் 40 சதவீதமும் குறைந்து உள்ளது. சமீபத்தில் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி கோரிய வழக்கில், ஆலைக்கு எதிராக ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதனால் எங்களது தொழில் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆண்டுக்கு 3 மில்லியன் டன் சரக்குகளை ஏற்றுமதி, இறக்குமதி செய்து வந்தோம்.
அனல் மின்நிலையங்களுக்கான நிலக்கரி கன்வேயர் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் ஸ்டெர்லைட் ஆலைக்கான மூலப்பொருட்கள் அனைத்தும் துறைமுகத்தில் இருந்து லாரிகளில் கொண்டு செல்லப்பட்டு குடோன்களில் வைத்து தேவைக்கு ஏற்ப ஆலைக்கு அனுப்பி வந்தோம்.
இந்த 3 மில்லியன் டன் சரக்குகள், கடந்த 2 ஆண்டுகளாக வரவில்லை. அது கண்டிப்பாக வரும் என்று எதிர்பார்த்து இருந்தோம். அதில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொழிலில் ஏற்பட்டுள்ள சரிவை ஈடுகட்டுவதற்கு மத்திய மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
ஏற்றுமதி இறக்குமதி தொழில் மிகப் பெரிய முதலீட்டு அடிப்படையில் நடந்து வருகிறது. முதலீடுகள் அனைத்தும் வங்கி கடன் பெற்று தொழில் செய்து வருகிறோம். ஆகையால் எங்களுக்கு கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் கடன் தவணையை மட்டுமே தள்ளி வைத்துள்ளனர். கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்.
தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகள் இயங்குவதற்கு தேவையான சூழ்நிலையை அரசு உருவாக்க வேண்டும். அப்போதுதான் துறைமுகத்துக்கு அதிக சரக்குகள் வரும். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 65 மில்லியன் டன் சரக்கு கையாளும் திறன் கொண்டது. ஆனால் கடந்த ஆண்டு 50 சதவீதம் மட்டுமே சரக்கு கையாளப்பட்டு உள்ளது.
ஆகையால் பொதுமக்களும், அரசும் இக்கட்டான சூழ்நிலையில் தொழில்துறைக்கு உதவ வேண்டும். தொழிற்சாலைகள் செயல் இழந்து விட்டால், மீண்டும் திறப்பது மிகவும் கடினம். ஆகையால் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, செயலாளர் கார்த்திக் பிரபு, துணை தலைவர் பீர் முகமது ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story