விஜயகாந்த் பிறந்தநாள் விழா: தே.மு.தி.க. சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்


விஜயகாந்த் பிறந்தநாள் விழா: தே.மு.தி.க. சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 28 Aug 2020 6:41 AM IST (Updated: 28 Aug 2020 6:41 AM IST)
t-max-icont-min-icon

விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி தே.மு.தி.க. சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநில தே.மு.தி.க. சார்பில் கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு புதுவை மாநில தலைவர் வி.பி.பி. வேலு தலைமை தாங்கினார். விழாவையொட்டி அங்காளம்மன் கோவிலில் கணபதி ஹோமம், குலதெய்வ ஹோமம், தன்வந்திரி ஹோமம், மகா லட்சுமி ஹோமம், நவக்கிர ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு வேட்டி -சேலை, துண்டு ஆகியவையும், ஆட்டோ டிரைவர் களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களும் இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பாகூர் தொகுதி பொறுப்பாளர்கள் துரைபாண்டி, காத்தவராயன், கிருஷ்ணமூர்த்தி, செல்வம், கோடீஸ்வரன், உப்பளம் சசிக் குமார், முத்தியால்பேட்டை அய்யனார், ஓம்பிரகாஷ், காலாப்பட்டு ரமேஷ், செல்வம், மண்ணாடிப்பட்டு தனம் செழியன், எம்.ஆர்.பரசுராமன், மணிகண்டன், தியாகு, அசோக், ஊசுடு ஜீவா, பாண்டியன், ஆறுமுகம், திருபுவனை விநாயகமூர்த்தி, அரியாங்குப்பம் வக்கீல் பாபு, நெட்டப்பாக்கம் முருகவேல், சிவா, ரமேஷ், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காரைக்காலிலும் விஜயகாந்த் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் மாநில செயலாளர் வி.பி.பி. வேலு தனது சொந்த செலவில் இசைக்கலைஞர்களுக்கு அரிசி, காய்கறிகள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். விழாவில் பங்கேற்றவர்களுக்கு மரக் கன்றுகளும் வழங்கப்பட்டது.

விழாவுக்கான ஏற்பாடுகளை நெடுங்காடு, கோட்டுச்சேரி நிர்வாகிகள் பாரதி, சுரேஷ், சவுந்தர், எடிசன் பிரபு, ராபர்ட், யாகுலசாமி, காரைக் கால் வடக்கு தங்கபிரகாஷ், ஆனந்து, காரைக்கால் தெற்கு சுப்பிரமணி, சுந்தரம், திருப்பட்டினம் திருமாவளவன், ஆசைத்தம்பி, திருநள்ளாறு பாண்டியன், துர்கா, சக்கரை ஞானசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story