அரியலூரில், கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி; 74 பேருக்கு தொற்று - பெரம்பலூரில் மேலும் 19 பேர் பாதிப்பு


அரியலூரில், கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி; 74 பேருக்கு தொற்று - பெரம்பலூரில் மேலும் 19 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 28 Aug 2020 3:15 AM IST (Updated: 28 Aug 2020 6:43 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் நேற்று உயிரிழந்தார். மேலும் 74 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. பெரம்பலூரில் மேலும் 19 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சி பகுதியை சேர்ந்த 6 பேர் மற்றும் கிராமிய பகுதிகளான லாடபுரம், நக்கசேலம், அடைக்கம்பட்டி, வாலிகண்டபுரம், கொளப்பாடி, ஒகளூர், நல்லறிக்கை, துங்கபுரம், கொளக்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 13 பேர் என மொத்தம் 19 பேருக்கு கொரோனா

வைரஸ் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து 19 பேரும் பெரம்பலூர், திருச்சி, சிறுவாச்சூர், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் ஆயிரத்து 240 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆயிரத்து 48 பேர் குணமடைந்துள்ளனர். 17 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

175 பேர் பெரம்பலூர், திருச்சி, அரியலூர், சேலம், சென்னை, புதுக்கோட்டை, சிறுவாச்சூர், கவுள்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதில் அரியலூர் நகராட்சி மற்றும் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தலா 17 பேருக்கும், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 14 பேருக்கும், செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 7 பேருக்கும், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேருக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 6 பேருக்கும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 11 பேருக்கும் என மொத்தம் 74 பேர் புதிதாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,452 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை சிகிச்சையில் குணமடைந்து 1,645 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை பலனின்றி மொத்தம் 28 பேர் இறந்துள்ளனர். நேற்று மொத்தம் 1,107 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆண்டிமடம் ஒன்றிய பகுதியில் நேற்று கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story