ஆன்-லைன் மூலம் அபராதம் விதிப்பதை கைவிடக்கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திரண்ட ஆட்டோ டிரைவர்கள்


ஆன்-லைன் மூலம் அபராதம் விதிப்பதை கைவிடக்கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திரண்ட ஆட்டோ டிரைவர்கள்
x
தினத்தந்தி 28 Aug 2020 3:30 AM IST (Updated: 28 Aug 2020 6:54 AM IST)
t-max-icont-min-icon

ஆன்-லைன் மூலம் அபராதம் விதிப்பதை கைவிடக்கோரி திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்கள் திரண்டனர்.

திருச்சி,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளன. ஊரடங்கு தளர்வு காரணமாக ஆட்டோக்கள் இயங்கி வந்தாலும் சவாரி சரிவர கிடைக்காததால் வருமானமின்றி தவித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் திருச்சி மாநகரில் சாலையில் செல்லும் வாகனங்களின் வாகன எண்ணை நோட்டமிட்டு ஆன்-லைன் முறையில் போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். ஆன்-லைன் மூலம் அபராதம் விதிக்கும் நடவடிக்கையை போலீசார் கைவிட வேண்டும். ஆட்டோ டிரைவர்கள் மற்றும் அனைத்து வாகன ஓட்டிகளையும் கண்ணியத் துடன் நடத்த வேண்டும்.

போக்குவரத்து நெருக் கடியான இடங்களில் போலீசார் பணியில் இல்லாமல், வாகன ஓட்டிகளிடம் அபராதத் தொகை வசூல் செய்வதிலேயே குறியாக உள்ளனர். ஆகவே இதை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க தலைவர் கோபிநாத் தலைமையில் நேற்று காலை ஆட்டோ டிரைவர்கள் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திரண்டனர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக நின்ற கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சங்க தலைவர் உள்பட 4 பேர் மட்டும் கமிஷனர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் கமிஷனர் லோகநாதனை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

Next Story