காஞ்சீபுரம் அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்: சிறுவன் சாவு


காஞ்சீபுரம் அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்: சிறுவன் சாவு
x
தினத்தந்தி 28 Aug 2020 7:03 AM IST (Updated: 28 Aug 2020 7:03 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த இளையனார்வேலூரை சேர்ந்தவர் தாட்சிணாமூர்த்தி. இவரது மகன்கள் தினேஷ் (வயது 17). விக்கி (15)., இவர்கள் இருவரும் ஒரே மோட்டார்சைக்கிளில் இளையனார்வேலூரில் இருந்து வாலாஜாபாத் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை தினேஷ் ஓட்டிச்சென்றார். இளையனார்வேலூர் குண்டு மதகு அருகே செல்லும்போது பின்னால் வந்த மணல் லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார்சைக்கிள் பின்புறம் மோதியது.

இதில் தினேஷ் தூக்கி வீசப்பட்டு, படுகாயம் அடைந்து அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய தம்பி விக்கி ரத்த வெள்ளத்தில் ஆபத்தான நிலையில் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகிறார். விபத்து நடந்த சிறிது நேரத்தில், கல்குவாரி மற்றும் மணல் லாரிகளால் இந்த பகுதியில் விபத்துக்கள் நடக்கிறது என்று கூறி இளையனார்வேலூர் பொதுமக்கள் சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பிறகு மறியல் கைவிடப்பட்டது.

Next Story