மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்க வந்த வீட்டில் நர்சு தூக்குப்போட்டு தற்கொலை


மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்க வந்த வீட்டில் நர்சு தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 28 Aug 2020 7:15 AM IST (Updated: 28 Aug 2020 7:15 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கொளத்தூர், மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்க வந்த வீட்டில் நர்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திரு.வி.க.நகர்,

சென்னை கொளத்தூர் பெரியார் நகர் 16-வது தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் தனது குடும்பத்துடன் கீழ்த்தளத்தில் வசித்து வருகிறார். இவரது தாய் கவுசல்யா (75). சற்று மனநலம் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் முதல் தளத்தில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், கவுசல்யாவை பராமரிக்க ஆறுமுகம், வில்லிவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நர்சிங் சென்டர் மூலம் ஜோதிகா (21) என்ற செவிலியரை மாத சம்பளம் ரூ, 15 ஆயிரத்துக்கு பேசி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரை சேர்ந்த ஜோதிகா கடந்த ஒரு வருடமாக ஜோதிகா மூதாட்டி கவுசல்யாவை பராமரித்து வந்த நிலையில், நேற்று காலை ஜோதிகா தீடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து ஆறுமுகம் பெரவள்ளூர் போலீசில் தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, அங்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ஜோதிகா தூக்கில் தொங்கும் இடத்திற்கு நேராக உள்ள பீரோ மீது செல்போனை வைத்து அவரது சாவை வீடியோ பதிவு செய்யும் வகையில் வைத்துள்ளார்.

இது குறித்து பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜோதிகா எதற்காக இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செல்போனில் உள்ள பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Next Story