கட்டாய கல்வி சட்டத்தின்படி 25 சதவீத இடஒதுக்கீட்டிற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட முதன்மை கல்விஅதிகாரி அறிவிப்பு
கட்டாய கல்விசட்டத்தின்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்புபவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட முதன்மை கல்விஅதிகாரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர்,
25 சதவீத இடஒதுக்கீட்டில் எல்.கே.ஜி. மற்றும் முதல் வகுப்பிற்கு தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்புபவர்கள் செப்டம்பர் மாதம் 25-ந்தேதிவரை இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
மேலும் சம்பந்தப்பட்ட பள்ளிகள் அனைவருக்கும் கல்விஇயக்க வட்டார மையங்கள், வட்டாரகல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவலகம் மூலமாகவும் இணையதளத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பதிவேற்றம் செய்யலாம்.
விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு பின்வரும் ஆவணங்களை எடுத்துவர வேண்டும். குழந்தையின் பாஸ்போர்ட் புகைப்படம், பிறப்பு சான்றிதழ், இருப்பிடம், சாதி, வருமானம், ஆதரவற்றோர், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தை, மூன்றாம் பாலினத்தவர், துப்புரவு தொழிலாளியின் குழந்தை, மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு அதற்குரிய சான்றிதழ்கள் கொண்டு வர வேண்டும்.
அந்தந்த பள்ளிகளில் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன்பின் முன்னுரிமை உள்ளவர்களுக்கு முதலில் சேர்க்கை வழங்கப்படும். பின்னர் மீதமுள்ள இடங்களுக்கு பள்ளியில் உள்ள இடங்களை விட அதிகமான அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்தால் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பெற்றோர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story