ராணிப்பேட்டை மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்கியது - ஒரே நாளில் 180 பேருக்கு தொற்று
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 180 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,976 ஆக உயர்ந்துள்ளது.
ராணிப்பேட்டை,
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம், திமிரி பகுதிகளை சேர்ந்த மொத்தம் 180 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9976 ஆக உயர்ந்துள்ளது. இதில் மொத்தம் 1234 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 64 ஆயிரத்து 43 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் 3,202 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டி உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 678 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை பகுதியில் ரெயில்வே ஸ்டேசன் ரோடு பகுதியை சேர்ந்த 39 வயது ஆண், பிஞ்சி பாரிநகரை சேர்ந்த 26 வயது பெண், வண்டி மேட்டு தெருவை சேர்ந்த 68 வயது ஆண், எஸ்.எம்.எச். குடியிருப்பு பகுதியை சேர்ந்த 34 வயது பெண், நவல்பூர் எம்.எப். ரோடு பகுதியை சேர்ந்த 50 வயது ஆண், கெல்லிஸ் ரோடு பகுதியை சேர்ந்த 65 வயது ஆண், காரை காமராஜர் தெருவை சேர்ந்த 65 வயது பெண், நேரு நகரை சேர்ந்த 43 வயது பெண், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 51 வயது ஆண், மாந்தாங்கல் பழைய திருத்தணி ரோடு பகுதியை சேர்ந்த 48 வயது ஆண், செட்டிதாங்கல் லாலாபேட்டை தெருவை சேர்ந்த 24 வயது ஆண், வானாபாடி பெரியதெருவை சேர்ந்த 59 வயது ஆண், 33 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதேபோல் சிப்காட் அடுத்த புளியங்கண்ணு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த 17 வயது பெண், லாலாபேட்டையை அடுத்த குப்பக்கல்மேடு பகுதியை சேர்ந்த 60 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
மேலும் அம்மூர் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த 35 வயது ஆண், மேட்டுகாலனி பகுதியை சேர்ந்த 50 வயது ஆண், அல்லிகுளம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த 40 வயது ஆண், வேலம் இந்திரா நகரை சேர்ந்த 53 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட 19 பேரும் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.
காவேரிப்பாக்கம் பகுதியில். நேற்று வெளியான பரிசோதனை முடிவுகளின்படி புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பாணாவரத்தை சேர்ந்த 50 வயது ஆண், 34 வயது பெண், அத்திப்பட்டு பஜனை கோவில் தெரு, குட்டை தெரு, காந்தி தெரு பகுதிகளில் 18 வயது பெண், 47 வயது பெண், 23 வயது ஆண், மாமண்டூர் காலனி அம்பேத்கர் தெருவை சேர்ந்த 27 வயது பெண், புதுப்பட்டு பெரிய தெருவை சேர்ந்த 29 வயது ஆண், ஆயர்பாடியை சேர்ந்த 51 வயது ஆண், ஆலப்பாக்கம் வினாயகர் கோயில் தெருவை சேர்ந்த 21 வயது ஆண் என 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story