சின்னசேலம் அருகே பரபரப்பு: ஏரியில் மண் அள்ளிய டிராக்டரை கிராம மக்கள் முற்றுகை
சின்னசேலம் அருகே ஏரியில் வண்டல் மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் டிராக்டரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சின்னசேலம்,
சின்னசேலம் அடுத்த மறவாநத்தம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இங்கு வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அனுமதியுடன் வண்டல் மண் டிராக்டர்கள் மூலம் விவசாய நிலங்களுக்கு எடுத்து செல்லப்படுகிறது. ஆனால் ஏரியில் இருந்து அளவுக்கு அதிகமான வண்டல் மண் எடுத்து செல்லப்படுவதாக புகார் எழுந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு நேற்று ஏரிக்கு வந்தனர். அப்பாது அங்கே வண்டல் மண் அள்ளிக்கொண்டிருந்த டிராக் டரை பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து சின்னசேலம் வருவாய் ஆய்வாளர் மணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டம் நடத்திய கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எங்கள் ஊர் ஏரியில் இருந்து அளவுக்கு அதிகமாக வண்டல் மண்ணை அள்ளி வெளியூர்களுக்கு கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்தனர். இதை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டதை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். ஏரியில் மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து டிராக்டரை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவத்தால் சின்னசேலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story