ஈரோடு மாவட்டத்தில் மேலும் 126 பேருக்கு கொரோனா தொற்று - ஒருவர் சாவு


ஈரோடு மாவட்டத்தில் மேலும் 126 பேருக்கு கொரோனா தொற்று - ஒருவர் சாவு
x
தினத்தந்தி 29 Aug 2020 3:30 AM IST (Updated: 29 Aug 2020 1:59 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 126 பேருக்கு நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. ஒருவர் இறந்துள்ளார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மாநகர் பகுதியில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் உள்ளது.

இந்த நிலையில் ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த 65 வயது ஆண் ஒருவர் காய்ச்சல் காரணமாக கடந்த 21-ந்தேதி பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் இவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே ஈரோடு மாவட்டத்தில் நேற்று மேலும் 126 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் வெளி மாவட்டத்தை சேர்ந்த 11 பேர் ஈரோடு மாவட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். நேற்று முன்தினம் வரை 2 ஆயிரத்து 620 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை நேற்று 2 ஆயிரத்து 735 ஆக உயர்ந்துள்ளது.

அதே நேரம் நேற்று ஒரே நாளில் 57 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு சென்று உள்ளனர்.

Next Story