போதை மாத்திரைகளை கடத்தி விற்றதாக கைதான பெண், பிரபல கன்னட நடிகையின் கல்லூரி தோழி
போதை மாத்திரைகளை கடத்தி விற்றதாக கைதான பெண், பிரபல கன்னட நடிகையின் கல்லூரி தோழி என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரு,
பெங்களூரு கல்யாண்நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட எல்.எஸ்.டி. போதை மாத்திரைகளையும், எம்.டி.எம்.ஏ. போதை மாத்திரைகளையும் ஒரு கும்பல் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் கடந்த 21-ந் தேதி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் புகுந்து போதை பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது அந்த வீட்டில் இருந்து 145 எம்.டி.எம்.ஏ. போதை மாத்திரைகள், 180 எல்.எஸ்.டி. போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக ரவீந்திரன், அனிகா, அனூப் ஆகிய 3 பேரை போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்து இருந்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் போதை மாத்திரைகளை ஜெர்மனி, பெல்ஜியம் நாடுகளில் இருந்து 3 பேரும் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும் போதை பொருட்களை வாங்குவதற்காக டார்க்வெப் என்ற இணையதளத்தை அனிகா பயன்படுத்தி வந்து உள்ளார். அவர் தான் போதை மாத்திரை விற்பனை கும்பலுக்கு தலைவி போல செயல்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி இருந்தார்கள். மேலும் அனிகாவை 7 நாள் காவலில் எடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அனிகாவிடம் போதை பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அதாவது கைதான அனிகா பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து உள்ளார். அப்போது அவருடன் தற்போது கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் ஒருவரும் படித்து உள்ளார். இதனால் அனிகாவும், அந்த பிரபல நடிகையும் தோழிகள் போல பழகி வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் அனிகா ஒரு சில கன்னட தொடர்களில் நடித்து உள்ளார். அவரை கன்னட திரையுலகில் அறிமுகம் செய்து வைத்ததே பிரபல நடிகை தான் என்றும் கூறப்படுகிறது. மேலும் பல்வேறு கன்னட நடிகைகள், நடிகர்களுடன் அனிகா செல்போனில் செல்பி புகைப்படம் எடுத்து உள்ளதாகவும் தெரிகிறது. தற்போது அனிகாவின் செல்போனை போதை பொருள் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்து உள்ளனர். கன்னட நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் அனிகாவிடம் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தியது தெரியவந்து உள்ளதால் இதுகுறித்து அவர்களுக்கு நோட்டீசு அனுப்பவும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் முடிவு செய்து உள்ளனர்.

Related Tags :
Next Story