செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது இதுவரை 404 பேர் உயிரிழப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது இதுவரை 404 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 29 Aug 2020 6:43 AM IST (Updated: 29 Aug 2020 6:43 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 296 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து, கொரோனா தொற்று எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது. இதுவரை தொற்றுக்கு 404 பேர் உயிரிழந்துள்ளனர்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சியில் உள்ள செங்குட்டுவன் தெருவில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 வயது சிறுவன், 75 வயது முதியவர், 33 வயது வாலிபர், 28 வயது வாலிபர் உள்பட 10 பேர், ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கண்டிகை எஸ்.கே.அவென்யூ பகுதியை சேர்ந்த 40 வயது பெண், சதானந்தபுரம் காந்தி சாலயை சேர்ந்த 34 வயது இளம்பெண், கொளப்பாக்கம் ஜனகபுரி நகரை சேர்ந்த 27 வயது வாலிபர், நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட மண்ணிவாக்கம் ராம்நகர் பகுதியை சேர்ந்த 31 வயது வாலிபர், வண்டலூர் ராஜரத்தினம் நகரை சேர்ந்த 53 வயது ஆண், மற்றும் காரணைப்புதுச்சேரி, ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதியை சேர்ந்த 32 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுடன் சேர்நத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 296 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆயிரத்து 58 ஆக அதிகரித்து உள்ளது. இவர்களில் 22 ஆயிரத்து 97 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 6 சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 404 ஆக உயர்ந்தது.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பூச்சிஅத்திப்பேடு வியாபாரிகள் சங்க முன்னாள் செயலாளரும், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் மாவட்ட நிர்வாக செயலாளராக பதவி வகித்து வந்தவருமான எஸ்.சின்னத்தம்பி (61) கொரோனா வைரஸ் நோய் தொற்றால் சிகிச்சை பலனின்றி சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பரிதாபமாக பலியானார்.

இவருடன் சேர்த்து திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் 298 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆயிரத்து 926 ஆக அதிகரித்து உள்ளது. இவர்களில் 21 ஆயிரத்து 706 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 403 ஆக உயர்ந்தது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 194 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாயினர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 703 ஆக அதிகரித்து உள்ளது. இவர்களில் 14 ஆயிரத்து 233 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 229 ஆக உள்ளது.

Next Story