திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் ‘ஜல் ஜீவன்’ திட்டம் கலெக்டர் தலைமையில் ஆலோசனை நடந்தது
திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் ‘ஜல் ஜீவன்’ திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
திருவள்ளூர்,
திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் ‘ஜல் ஜீவன்’ திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில், மத்திய-மாநில அரசுகள் இணைந்து திருவள்ளூர் மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அடுத்த 5 ஆண்டுகளில் குடிநீர் குழாய் இணைப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு தொடங்கியுள்ள ‘ஜல் ஜீவன் இயக்கம்’ என்ற புதிய திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்படி, ஊரகப் பகுதிகளில் கிராமப்புற மக்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு 55 லிட்டர் அளவுக்கு குறையாமல் குடிநீர் வழங்கப்படும். இத்திட்டத்திற்காக குடிநீர் குழாய் இணைப்புகளை அனைத்து பகுதிகளுக்கும் வருகிற 2024-ம் ஆண்டுக்குள் அமைத்து தருவது என முடிவு செய்யப்பட்டது.
மேலும் கிராம ஊராட்சிகளில் வறட்சி பாதிப்புக்குள்ளான மற்றும் குடிநீரின் தரம் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குதல், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், கிராம ஊராட்சி கட்டிடங்கள், சுகாதார மையங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு ஏற்படுத்தி தருவது உள்பட கிராமப்புற பகுதிகளில் குடிநீர் ஆதாரங்களை உருவாக்குதல் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 2020-21 ஆம் ஆண்டில் 1,770 குக்கிராமங்களில் 1 லட்சத்து 78 ஆயிரத்து 124 வீட்டுக் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, ஊராட்சிக் குழு துணைத் தலைவர்கள், ஒன்று குழு தலைவர் துணைத் தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story