நீட் தேர்வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமை தாங்கினார். இதில், முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன், செல்லத்துரை அப்துல்லா, பாரி ராஜன், துல்கீப், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, மாவட்ட பொது செயலாளர்கள் மேகநாதன், மணிகண்டன், மாவட்ட பொருளாளர் அகமது கபீர், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சரவணகாந்தி, மாவட்ட இலக்கிய அணி தலைவர் முருகேசன், பரமக்குடி நகர் தலைவர் அப்துல் அஜீஸ், சித்தார் கோட்டை ஒன்றிய கவுன்சிலர் கமர்தீன், தீப்பொறி கருணாகரன், சேமனூர் ராஜேந்திரன், பரமக்குடி ரமேஷ் உள்பட ஏராளமானோர் சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் பேசியதாவது:- இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு மாநிலங்களில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால் நீட் தேர்வுக்கு மட்டும் கால அவகாசம் வழங்கப்பட்டு, தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பீதியில் வெளியே செல்லவே அச்சமடைந்துள்ள இதுபோன்ற நிலையில் மாணவர்கள் எப்படி தேர்வுகளை எதிர்கொள்வார்கள். எனவே, நீட் உள்ளிட்ட தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், நகர் தலைவர் கோபி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story