நாகர்கோவில், தக்கலையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம் - எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் பங்கேற்பு


நாகர்கோவில், தக்கலையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம் - எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் பங்கேற்பு
x
தினத்தந்தி 29 Aug 2020 6:00 AM GMT (Updated: 29 Aug 2020 6:34 AM GMT)

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி காங்கிரசார் சார்பில் நாகர்கோவில் மற்றும் தக்கலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

நாகர்கோவில்,

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில், நாடு முழுவதும் நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வு நடத்த தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தேர்வுகளை நடத்துவது கண்டிக்கத்தக்கது. எனவே இந்த 2 தேர்வுகளையும் நடத்த எதிர்ப்பு தெரிவித்தும், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக்கோரியும் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதற்கு மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பிரின்ஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் சபீன், மகிளா காங்கிரஸ் தலைவர் சபீதா, மாவட்ட துணை தலைவர் மகேஷ்லாசர், வட்டார தலைவர்கள் அசோக்ராஜ், செல்வராஜ், நிர்வாகிகள் ஜெயராஜ், தவசிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல, குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் தக்கலை தலைமை தபால் நிலையம் முன் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு பத்மநாபபுரம் நகர தலைவர் ஹனுகுமார் தலைமை தாங்க, ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் சாலின், பெஞ்சமின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட துணை தலைவர் ஹல்லாஜ், நகர இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் நிர்மல், திருவட்டார் கிழக்கு வட்டார தலைவர் ஜெகன்ராஜ், நிர்வாகிகள் ஜாண்கிறிஸ்டோபர், ஜோண்ஸ் இமானுவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் தம்பி விஜயகுமார் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார்.

Next Story