எச்.வசந்தகுமார் படத்துக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை


எச்.வசந்தகுமார் படத்துக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 30 Aug 2020 4:30 AM IST (Updated: 29 Aug 2020 11:35 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் எச்.வசந்தகுமார் படத்துக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி,

தமிழக காங்கிரஸ் செயல் தலைவரும், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.வசந்தகுமார் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இதையொட்டி தூத்துக்குடி பால விநாயகர் கோவில் தெருவில் உள்ள தெற்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் அலுவலகம் முன்பு அலங்கரிக்கப்பட்ட அவரது உருவ படத்துக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். தெற்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டேவிட் பிரபாகரன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர்கள் தங்கராஜ், செந்தூர் பாண்டியன், ஓ.பி.சி. பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, பஞ்சாயத்து ராஜ் சங்கதன் பாரகன் அந்தோணி முத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கயத்தாறு புதிய பஸ் நிலையம் முன்பு அலங்கரிக்கப்பட்ட எச்.வசந்தகுமாரின் உருவ படத்துக்கு நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தி.மு.க. நகர செயலாளர் சுரேஷ் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story