மாவட்ட செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பவித்ர உற்சவம் பக்தர்கள் இன்றி நடந்தது + "||" + The sacred festival at the Srivilliputhur Andal Temple took place without devotees

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பவித்ர உற்சவம் பக்தர்கள் இன்றி நடந்தது

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பவித்ர உற்சவம் பக்தர்கள் இன்றி நடந்தது
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பவித்ர உற்சவம் பக்தர்கள் இன்றி நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வளாகத்தில் உள்ள பெரிய பெருமாள் சன்னதியில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாத இறுதி அல்லது செப்டம்பர் மாத தொடக்கத்தில் பவித்ர உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு பவித்ர உற்சவம் நேற்று கோவிலில் தொடங்கியது.


மொத்தம் 7 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் முதல் நாளான நேற்று பக்தர்கள் யாரும் இன்றி அர்ச்சகர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

சிறப்பு திருமஞ்சனம்

உற்சவத்தை முன்னிட்டு பெரியபெருமாள் பூமா தேவி, ஸ்ரீதேவி ஆகியோருக்கு சிறப்பு திருமஞ்சனமும், தீபாராதனைகளும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சிறந்த முறையில் தயாரிக்கப்பட்ட மஞ்சள் நூல்கள் பெரிய பெருமாள், பூமா தேவி, ஸ்ரீதேவி ஆகியோருக்கு அணிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் 23-ந்தேதி தாயார் திருவடி சேவை
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் நேற்று தொடங்கியது. வருகிற 23-ந்தேதி தாயார் திருவடி சேவை நடக்கிறது.
2. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவம் தொடங்கியது இன்று பூச்சாண்டி சேவை
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவம் நேற்று தொடங்கியது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) பூச்சாண்டி சேவை நடைபெறுகிறது.