புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறைகளை தெரிவிக்கலாம் - கலெக்டர் ஷில்பா தகவல்
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறைகளை தெரிவிக்கலாம்என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தங்களது சொந்த மாநிலங்களுக்கு செல்ல விருப்பமுள்ளவர்கள் மற்றும் தங்குமிடம், உணவு, அடிப்படை வசதிகள் தொடர்பான குறைகளுக்கு 1077, 0462-2501070, 94428 66999 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story