மாவட்ட செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 158 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி - மொத்த பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியது + "||" + In Erode district Corona for 158 people in a single day One killed Total impact Exceeded 3 thousand

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 158 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி - மொத்த பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியது

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 158 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி - மொத்த பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியது
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியது. மேலும், நோய் தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்தார்.
ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. மாநகராட்சிதிகளில் அதிகரித்து வந்த பாதிப்பு, தற்போது கிராமப்புறங்களிலும் வேகமெடுத்து வருகிறது. மாவட்டத்தில் தினமும் பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ கடந்து இருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் 158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 49 ஆக உயர்ந்தது. இதில் ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட வீரப்பன்சத்திரம், ஜான்சிநகர், பெரியவலசு, பி.பி.அக்ரஹாரம், ஆர்.என்.புதூர், மாணிக்கம்பாளையம், வளையக்காரவீதி, கோணவாய்க்கால், பாரதிவீதி, எல்லப்பாளையம், திண்டல், சூரம்பட்டி, காலமேகம் வீதி, வெட்டுக்காட்டு வலசு, வள்ளிபுரம், கச்சேரிவீதி, செங்கோடம்பள்ளம், ரெயில்வே காலனி, கொல்லம்பாளையம், கைகாட்டிவலசு, கருங்கல்பாளையம், ரங்கம்பாளையம், திருநகர்காலனி, கே.என்.கே.நகர், மூலப்பாளையம், ஈ.பி.பி.நகர், பழையபாளையம், மாணிக்கம்பாளையம், கிருஷ்ணம்பாளையம், மூலப்பட்டறை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதேபோல் கொடுமுடி, பெருந்துறை ஆர்.எஸ்.ரோடு, தங்கம்நகர், சின்னமடத்துபாளையம், சென்னிமலை உலகபுரம், வெள்ளோடு தண்ணீர்பந்தல், சித்தோடு இந்திராநகர், சந்தைமேடு, காலிங்கராயன்பாளையம், பேரோடு, பவானி கிளைச்சிறை, செங்காடு, தேவபுரம், அண்ணாநகர், மேட்டுப்பாளையம், கவுந்தப்பாடி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம் லக்கம்பட்டி, பி.வெள்ளாளபாளையம், கரட்டடிபாளையம், மேட்டுவலசு, டி.என்.பாளையம் அருகே வாணிப்புத்தூர், நம்பியூர் காமராஜ்நகர், பவானிசாகர், சத்தியமங்கலம் நேருநகர், ரங்கசமுத்திரம், முத்துமாரியம்மன் கோவில் வீதி, பத்ரகாளியம்மன் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பரவி உள்ளது.

மாவட்டத்தில் நேற்று 185 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 1,722 பேர் குணமடைந்து உள்ளார்கள். 1,287 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஏற்கனவே 39 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் பலியானார். ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த 56 வயது ஆண் கொரோனா தொற்று காரணமாக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கடந்த 26-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் மொத்த சாவு எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு மாவட்டத்தில் 125 பேருக்கு தொற்று கொரோனாவுக்கு 2 பேர் பலி சாவு எண்ணிக்கை 84 ஆக உயர்வு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும் புதிதாக 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது.
2. ஈரோடு மாவட்டத்தில் 148 பேருக்கு தொற்று கொரோனாவுக்கு பெண் உள்பட 3 பேர் பலி - சாவு எண்ணிக்கை 70 ஆக உயர்வு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் உள்பட 3 பேர் பலியானார்கள். இதனால் சாவு எண்ணிக்கை 70 ஆக உயர்ந்தது.
3. ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு
ஈரோடு மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படுகிறது.
4. ஈரோடு மாவட்டத்தில் மேலும் 126 பேருக்கு கொரோனா தொற்று - ஒருவர் சாவு
ஈரோடு மாவட்டத்தில் மேலும் 126 பேருக்கு நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. ஒருவர் இறந்துள்ளார்.
5. ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 5 பேர் சாவு புதிதாக 102 பேருக்கு பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 5 பேர் இறந்தனர். மேலும், புதிதாக 102 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.