மாவட்ட செய்திகள்

போலீசாருக்கு கொரோனா தொற்று வாலாஜாபாத் போலீஸ்நிலையம் மூடல் + "||" + Corona infection to police Walajabad police station closed

போலீசாருக்கு கொரோனா தொற்று வாலாஜாபாத் போலீஸ்நிலையம் மூடல்

போலீசாருக்கு கொரோனா தொற்று வாலாஜாபாத் போலீஸ்நிலையம் மூடல்
வாலாஜாபாத் போலீஸ் நிலையத்தில், போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி, போலீஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
வாலாஜாபாத்,

வாலாஜாபாத் போலீஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என 20-க்கும் மேற்பட்டோர் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். அங்கு பணியாற்றும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீ சார் உள்ளிட்ட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து போலீஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.


போலீஸ் நிலைய பணிகள் பாதிக்காத வகையில் வாலாஜாபாத் இந்திரா நகர் போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் குடியிருப்பில் தற்காலிகமாக போலீஸ் நிலையம் செயல்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அசாம், ஜார்க்கண்ட் மாநில கொரோனா பாதிப்பு விவரம்
அசாம் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 666- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால் பிப்ரவரிக்குள் கொரோனாவை கட்டுப்படுத்தி விடலாம்: நிபுணர் குழு அறிக்கை
வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றினால் பிப்ரவரிக்குள் கொரோனாவை கட்டுப்படுத்தி விடலாம் என்றும், புதிதாக ஊரடங்கு அமல்படுத்த தேவை இல்லை என்றும் மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. இந்தியாவில் இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர் எண்ணிக்கை 88 சதவீதமாக உயர்வு
இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர் எண்ணிக்கை 88 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில் நாடு முழுவதும் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது.
4. இமாச்சல பிரதேசத்தில் புதிதாக 170- பேருக்கு கொரோனா
இமாச்சல பிரதேசத்தில் புதிதாக 170- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. 1½ மாதத்துக்கு பின் முதல் முறையாக கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8 லட்சத்துக்கு கீழே சரிவு
இந்தியாவில் 1½ மாதத்துக்கு பின் முதல் முறையாக சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 8 லட்சத்துக்கு கீழே குறைந்துள்ளது.