மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிப்பு: கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 419 பேர் பாதிப்பு + "||" + In Chengalpattu district Day by day increase For corona infection 419 people were affected in a single day

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிப்பு: கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 419 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிப்பு: கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 419 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நேற்று மட்டும் 419 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்த 59 வயது ஆண், 47 வயது பெண், 19 வயது இளம்பெண், காரணைப்புதுச்சேரி ஊராட்சி கோகுலம் காலனி, நடராஜன் தெருவில் வசிக்கும் 62 வயது மூதாட்டி, 40 வயது பெண், 16 வயது சிறுவன் உள்பட 79 பேருக்கும், மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட நகர் மற்றும் கிராம பகுதியில் 36 பேர், ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட நெடுங்குன்றம் ஊராட்சி மப்பேடு, புத்தூர் பகுதியில் வசிக்கும் 49 வயது பெண், 20 வயது இளம்பெண், 16 வயது சிறுவன் உள்பட 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 419 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆயிரத்து 763 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 22 ஆயிரத்து 736 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 419 ஆக உயர்ந்தது. 2 ஆயிரத்து 608 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி பகுதியை சேர்ந்த 35, 33 வயதுடைய வாலிபர்கள், வஞ்சுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த 46, 40,41 வயதுடைய பெண்கள், வைப்பூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த 70, 58 மற்றும் 56 வயதுடைய ஆண்கள், மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த 53 வயது ஆண், ஒரகடம் பகுதியை சேர்ந்த 20, 29 வயது வாலிபர்கள், வல்லம் பகுதியை 31 வயது ஆண் ஆகியோருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் இவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று மட்டும் 193 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாயினர். மாவட்ட முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 155 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 14 ஆயிரத்து 935 பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 241 ஆக உயர்ந்தது. 1 ஆயிரத்து 979 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளுர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 193 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாயினர். மாவட்ட முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 475 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 22 ஆயிரத்து 334 பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று மட்டும் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், மாவட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 396 ஆக உயர்ந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 283 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 283 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
2. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 319 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 319 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
3. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆயிரத்தை நெருங்கியது
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆயிரத்தை நெருங்கியது.
4. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது இதுவரை 404 பேர் உயிரிழப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 296 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து, கொரோனா தொற்று எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது. இதுவரை தொற்றுக்கு 404 பேர் உயிரிழந்துள்ளனர்.
5. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 294 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 294 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.