மாவட்ட செய்திகள்

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பரிசு தென்மண்டல ஐ.ஜி. முருகன் வழங்கினார் + "||" + Better served Gift to the police Southern IG Presented by Murugan

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பரிசு தென்மண்டல ஐ.ஜி. முருகன் வழங்கினார்

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பரிசு தென்மண்டல ஐ.ஜி. முருகன் வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு தென்மண்டல ஐ.ஜி. முருகன் பரிசுகள் வழங்கினார்.
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அனைத்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. முருகன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர், போலீசார் சட்டத்துக்கு உட்பட்டு பணியாற்ற வேண்டும் என்று அறிவுரைகளை வழங்கினார்.


தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசார் 10 பேருக்கு பரிசுகளையும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பிய போலீசார் 10 பேருக்கு பழக்கூடை மற்றும் சான்றிழ்களையும், கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் துறையினருக்கு மொத்தம்் 45 ஆயிரம் முககவசங்களையும் போலீஸ் ஐ.ஜி. முருகன் வழங்கினார்.

நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் செல்வன், கோபி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கணேஷ் (தூத்துக்குடி நகரம்), பழனிக்குமார்(ஊரகம்), பாரத் (திருச்செந்தூர்), வெங்கடேசன் (ஸ்ரீவைகுண்டம்), சங்கர் (மணியாச்சி), கலைக்கதிரவன் (கோவில்பட்டி), நாகராஜன் (விளாத்திகுளம்), பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர் (மாவட்ட குற்றப்பிரிவு), இளங்கோவன் (நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு) மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.