பஸ்கள் இயங்குவதற்கு முன்பே ஜெயங்கொண்டத்தில் போக்குவரத்து நெரிசல் - கனரக வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க கோரிக்கை
பஸ்கள் இயங்குவதற்கு முன்பே ஜெயங்கொண்டத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே கனரக வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நான்கு ரோடு சந்திப்பில் திருச்சி, சென்னை, விருத்தாச்சலம், கும்பகோணம், சிதம்பரம் உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து ஏராளமான கனரக, இலகுரக மற்றும் இருசக்கர வாகனங்கள் அதிகளவில் வந்து செல்கின்றன. இதனால் பொதுமக்கள் நடந்துக் கூட செல்லமுடியாத நிலையில் வாகன போக்குவரத்து அதிகளவில் உள்ளது.
ஜெயங்கொண்டம் நான்கு ரோடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான அரசின் வழிகாட்டுதலான சமூக இடைவெளி மற்றும் முககவசம் என்பது பார்ப்பதற்கே அரிதாக உள்ளது. பெரும்பாலான மக்கள் சமூக இடைவெளி இல்லாமலும், முககவசம் அணியமலும் வந்து செல்கின்றனர். இதனால் வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
எனவே வெளியூர்களிலிருந்து வரும் கனரக, இலகு ரக வாகனங்களை நான்கு ரோடு சந்திப்பிற்கு வராமல் மாற்றுப்பாதையில் செல்ல உத்தரவிட வேண்டும். மேலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நான்கு திசைகளிலிருந்தும் வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் போக்குவரத்து போலீசார் திணறி வரும் நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பஸ்கள் இயக்கவும், சில தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்தபகுதியில் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இங்கு வைரஸ் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story