தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு


தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 31 Aug 2020 10:00 PM GMT (Updated: 1 Sep 2020 1:54 AM GMT)

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தர்மபுரி,

தர்மபுரி வெண்ணாம்பட்டியை சேர்ந்த 65 வயது முதியவர் சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவரை தனிமைப்படுத்தி பரிசோதித்தபோது கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. குமாரசாமிப்பேட்டையை சேர்ந்த 55 வயது நகைக்கடை ஊழியர், 52 வயது பெண், பழைய தர்மபுரியை சேர்ந்த 48 வயது பெண், அரூர் சிக்கலூரை சேர்ந்த 22 வயது பெண், கடத்தூரை சேர்ந்த 48 வயது பெண், பென்னாகரத்தை சேர்ந்த 55 வயது குவாரி பணியாளர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

நேற்று தொற்று கண்டறியப்பட்ட 7 பேரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,239 ஆக அதிகரித்து உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி பகுதியில் 3 ஆண்கள், பர்கூர் பகுதியில் 2 பெண்கள், ஊத்தங்கரை பகுதியில் 2 ஆண்கள், ஓசூர் பகுதியில் 2 ஆண்கள், ஒரு பெண், போச்சம்பள்ளி பகுதியில் ஒரு ஆண் என மொத்தம் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,142 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 25 பேர் சிகிச்சை முடிந்து, தங்கள் வீடுகளுக்கு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story