மசினகுடியில் கணவர் கண் எதிரே பயங்கரம்: மாடு மேய்க்க சென்ற பெண்ணை புலி அடித்து கொன்றது


மசினகுடியில் கணவர் கண் எதிரே பயங்கரம்: மாடு மேய்க்க சென்ற பெண்ணை புலி அடித்து கொன்றது
x
தினத்தந்தி 1 Sept 2020 3:15 AM IST (Updated: 1 Sept 2020 9:48 AM IST)
t-max-icont-min-icon

மசினகுடியில் மாடு மேய்க்க சென்ற பெண்ணை கணவர் கண் எதிரே புலி அடித்து கொன்றது. இந்த பயங்கர சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் வெளி மண்டல பகுதியில் மசினகுடி, சிங்காரா உள்ளது. இங்கு புலிகள், கரடி, செந்நாய், சிறுத்தைப்புலி, காட்டு யானை என பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்த நிலையில் மசின குடி குரும்பர்பாடியை சேர்ந்த சி.மாதன், அவரது மனைவி கவுரி (வயது 50) மற்றும் லட்சுமி, பெள்ளி, ஜானகி உள்பட பலர் நேற்று காலை மாடுகளை மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு அழைத்து சென்றனர்.

அப்போது காலை 11 மணிக்கு தனியார் தங்கும் விடுதி அருகே வன எல்லையில் ஆதிவாசி மக்கள் நடந்து சென்றபோது புதருக்குள் மறைந்து இருந்த புலி ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் ஆக்ரோஷத்துடன் வேகமாக ஆதிவாசி மக்களை நோக்கி பாய்ந்து வந்தது. தொடர்ந்து மாதனின் மனைவி கவுரியை புலி அடித்தது.

பின்னர் அவரது கழுத்தை கடித்தவாறு வேகமாக வனத் துக்குள் இழுத்து சென்றது. தனது கண் எதிரே மனைவியை புலி கடித்து இழுத்து செல்வதை கண்ட மாதன் மற்றும் சக ஆதிவாசி மக்கள் கூச்சலிட்டு கதறி அழுதனர். மேலும் சத்தம் போட்டவாறு பின்னால் ஓடினர். இதனிடையே சத்தம் கேட்டு பொதுமக்கள் வனத்துக் குள் ஓடி வந்தனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு மசினகுடி போலீசார், வனத் துறையினர் விரைந்து வந்தனர். தொடர்ந்து வனத்துக்குள் தேடுதல் வேட்டை நடத்தப்பட் டது. அப்போது வனத்துக்குள் சுமார் 1 கி.மீட்டர் தொலைவில் ஒரு புதர்களுக்கு இடையே கவுரி பிணமாக கிடந்தார். மேலும் புலி பதுங்கி உள்ளதா? என தேடுதல் வேட்டை நடத்தி னர். பின்னர் புலி இல்லாததை உறுதி செய்த போலீசார், பொதுமக்கள் புதர்களுக்கு இடையே ரத்த வெள்ளத்தில் கிடந்த கவுரியின் உடலை மீட்டனர். அப்போது புலியின் பற்கள் கழுத்து, தலை பகுதியில் மிக ஆழமாக பதிந்து இருந்தது. பின்னர் அடர்ந்த வனத்தில் இருந்து உடலை பொதுமக்கள் தூக்கி வந்தனர். தொடர்ந்து சாலையில் நிறுத்தி வைத்திருந்த ஆம்புலன்சில் ஏற்றி கூடலூர் அரசு ஆஸ்பத் திரிக்கு பிரேத பரிசோதனைக் காக உடல் கொண்டு செல்லப் பட்டது.

இதற்கிடையில் மசினகுடி வனப்பகுதியின் கரையோரம் கேமராக்களை பொருத்தும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டு உள்ளனர். இறந்து போன பெண்ணின் மகன் மணி சிங்காரா வனச் சரகத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றி வருகிறார். தனது தாயை புலி அடித்து கொன்றதை அறிந்து அவர் கதறி அழுதது பார்ப்பவர்களின் கண்களை கலங்க வைத்தது. கடந்த 2015, 2016-ம் ஆண்டு கூடலூர் அருகே தேவர்சோலை, பாட்ட வயல் பகுதியில் 2 பேரை புலி அடித்து கொன்றது. மசினகுடி யில் ஆதிவாசி பெண்ணை புலி அடித்து கொன்ற சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story