பிறந்த நாளையொட்டி பூலித்தேவன் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை அமைச்சர் பங்கேற்பு


பிறந்த நாளையொட்டி பூலித்தேவன் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை அமைச்சர் பங்கேற்பு
x
தினத்தந்தி 2 Sep 2020 12:02 AM GMT (Updated: 2 Sep 2020 12:02 AM GMT)

மாமன்னர் பூலித்தேவன் பிறந்த நாளையொட்டி அவருடைய முழு உருவச்சிலைக்கு அமைச்சர் ராஜலட்சுமி உள்பட பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

வாசுதேவநல்லூர்,

மாமன்னர் பூலித்தேவனின் 305-வது பிறந்த நாள் விழாவை நேற்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கொண்டாடினார்கள். தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும் செவலில் உள்ள அவருடைய மணிமண்டபத்தில் உள்ள முழு உருவ வெண்கல சிலைக்கு அமைச்சர் ராஜலட்சுமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கொரோனா தொற்று ஊரடங்கையொட்டி அங்கு பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதையொட்டி பல்வேறு அமைப்பினர் பல இடங்களில் அவருடைய உருவப்படத்தை வைத்து மாலை அணிவித்து வழிபட்டனர்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் மனோகரன் (வாசுதேவநல்லூர்), செல்வமோகன்தாஸ் பாண்டியன் (தென்காசி), தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் மூர்த்தி பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக பூலித்தேவன் முழுஉருவ சிலைக்கு, தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சங்கரன்கோவில் உதவி கலெக்டர் முருகசெல்வி, சிவகிரி தாசில்தார் ஆனந்த், தலைமையிடத்து தாசில்தார் மைதீன் பட்டாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

வாரிசுகள் மரியாதை

பூலித்தேவனின் வாரிசான கோமதி முத்துராணி துரைச்சி தலைமையில் அவரது குடும்பத்தினர் சிவகுமாரசாமித்துரை, சிபி உள்ளமுடையார்துரை, பாண்டியராஜா மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு பூலித்தேவன் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவில் பூலித்தேவனின் நினைவு மாளிகையை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும். அவரது பெயரில் தபால் தலை வெளியிட தமிழக அரசு, மத்திய அரசிடம் பரிந்துரை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

நெற்கட்டும்செவல் மாமன்னர் பூலித்தேவன் மக்கள் இயக்க தலைவரும், நேதாஜி சுபாஷ் சேனை தென்மண்டல தலைவருமான பூசைத்துரை தலைமையில் மரியாதை செலுத்தினர். நிர்வாகி வெள்ளத்துரை, உள்ளமுடையார்துரை, நேதாஜி சுபாஷ்சேனை வடக்கு மாவட்டத்தலைவர் கோட்டூர் சாமிபாண்டியன், வடக்கு மாவட்ட இளைஞர் அணிச்செயலாளர் குமார் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

தி.மு.க.வினர் மரியாதை

தி.மு.க. மாநில வர்த்தகர் அணி துணை தலைவர் அய்யாத்துரை பாண்டியன் தலைமையில் பூலித்தேவன் உருவச்சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து 1000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

முன்னதாக சங்கரன்கோவிலில் உள்ள கலைஞர் கல்வி அறக்கட்டளை வளாகத்தில் பூலித்தேவன், தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆகியோரது உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

விழாவில் மாவட்ட துணைச்செயலாளர் மாடசாமி, ஒன்றிய செயலாளர்கள் தென்காசி ராமையா, செங்கோட்டை ரவிசங்கர், வாசுதேவநல்லூர் பொன்.முத்தையாபாண்டியன், குருவிகுளம் சேர்மதுரை, பொதுக்குழு உறுப்பினர்கள் சக்தி, காசிதர்மம் துரை, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் முத்துராமலிங்கம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஹக்கீம், மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மனோகரன், தலைமை கழக பேச்சாளர் ஆயிரப்பேரி முத்துசாமி, முன்னாள் மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் முத்துக்குமார், முன்னாள் மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் இஞ்சி இஸ்மாயில், மாவட்ட பிரதிநிதிகள் கலைசெல்வன், முத்து பாண்டியன், கனியப்பா, ஒன்றிய துணை செயலாளர் வாசுதேவன், வடகரை அவைத்தலைவர் அமானுல்லா, முன்னாள் கவுன்சிலர் கண்ணண், பண்பொழி பேரூர் கழக செயலாளர் ராஜராஜன், செங்கோட்டை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ்குமார், துணை அமைப்பாளர்கள் இசக்கி துரை, சுப்புராஜ், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர்கள் லியோன், பூலோகராஜ், தகவல் தொழில் நுட்ப அணி கற்குடி சுரேஷ், சுரண்டை அருணா, ஊராட்சி செயலாளர்கள் பிள்ளையார், காளைப்பாண்டி, ராஜகுலராமர் பாண்டியன், பிச்சையா, சிவசங்கர், ஜெய்சங்கர், பாலகிருஷ்ணன், சின்னத்துரை, ராஜா, வீராணம் பழனிசாமி, ஒன்றிய பிரதிநிதி பேச்சிமுத்து, இடைகால் செல்லதுரை, திருச்சிற்றம்பலம் தங்கபாண்டியன், வடிவேல் பாண்டியன், இடைகால் அரசகுமார், மூர்த்தி, முருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் உத்தரவின் பேரில் தென்காசி மாவட்ட எல்லைகள் முழுவதும் சோதனை சாவடி அமைத்து வெளியூர்களில் இருந்து பொதுமக்கள் யாரும் நெற்கட்டும்செவல் கிராமத்திற்கு வராத அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சுப்புராஜா (நெல்லை), ஈஸ்வரன் (கன்னியாகுமாரி), புளியங்குடி துணை சூப்பிரண்டு சக்திவேல், இன்ஸ்பெக்டர்கள் அலெக்ஸ்ராஜ், ஆடிவேல் ஆகியோர் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நெல்லை

நெல்லை சந்திப்பு சி.என்.கிராமத்தில் அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் பூலித்தேவன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த மாமன்னர் பூலித்தேவன் உருவப்படத்திற்கு தலைவர் ஏ.எம்.மூர்த்தி தேவர் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் பொதுச்செயலாளர் நயினார் பாண்டியன், நிர்வாகிகள் விசுவநாதன், சுரேஷ்குமார், நவீன், முருகதாஸ் குருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

த.ம.மு.க.

பாளையங்கோட்டை மகாராஜநகரில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த மாமன்னர் பூலிதேவன் உருவப்படத்திற்கு தமிழர் விடுதலை கொற்றம் தலைவரும், சான்றோர் பேரவை ஒருங்கிணைப்பாதளருமான அ.வியனரசு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக மாவட்ட தலைவர் கண்மணிமாவீரன், தமிழக மக்கள் ஜனநாயக மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்துல்ஜப்பார், மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்பபாண்டியன், தமிழர் விடுதலை கொற்றம் மாவட்ட செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story