பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - வலங்கைமானில் நடந்தது


பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - வலங்கைமானில் நடந்தது
x
தினத்தந்தி 3 Sept 2020 3:45 AM IST (Updated: 3 Sept 2020 5:05 AM IST)
t-max-icont-min-icon

வலங்கைமானில் பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வலங்கைமான், 

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆதிச்சமங்கலம், அரித்துவாரமங்கலம், மேலவிடையல்நல்லூர், வேலங்குடி, செம்மங்குடி, சிங்காரம்பாளையம், பெருங்குடி, விளத்தூர், களத்தூர், வடக்கு பட்டம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நடப்பு ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகை பயனாளிகள் பட்டியலில் ஈடுபட்டதாக கூறி வலங்கைமான் தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது விடுபட்டவர்களுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். முன்னதாக கோரிக்கையை வலியுறுத்தி பேரணி நடந்தது. வலங்கைமான் கடைத்தெரு காளியம்மன் கோவில் அருகில் இருந்து புறப்பட்ட பேரணி தாசில்தார் அலுவலகம் முன்பு நிறைவடைந்தது.

இதைத்தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நகர தலைவர் வைத்தியலிங்கம், வட்டார தலைவர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி தாசில்தார் கண்ணனிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

Next Story