டாக்டர் தாக்கப்பட்டதை கண்டித்து ஜிப்மர் டாக்டர்கள் திடீர் போராட்டம்


டாக்டர் தாக்கப்பட்டதை கண்டித்து ஜிப்மர் டாக்டர்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 3 Sept 2020 5:30 AM IST (Updated: 3 Sept 2020 5:30 AM IST)
t-max-icont-min-icon

டாக்டர் தாக்கப்பட்டதை கண்டித்து ஜிப்மர் டாக்டர்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

புதுவை கோரிமேட்டில் ஜிப்மர் மருத்துவமனை உள்ளது. இங்கு கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக் கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வார்டில் இளநிலை மருத்துவரான குணசேகரன் பணியில் இருந்துள்ளார். அப்போது கொரோனா நோயாளி ஒருவரை கவனிப்பது தொடர்பாக அவருக்கும் ஆண் செவிலியரான செந்தில் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த செந்தில், டாக்டரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் டாக்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திடீர் போராட்டம்

செவிலியரால் டாக்டர் தாக்கப்பட்டதை கண்டித்து ஜிப்மர் டாக்டர்கள் சங்கத்தினர் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இயக்குனர் அலுவலகம் முன்பு கூடிய அவர்கள், டாக்டரை தாக்கிய ஆண் செவிலியர் மீது உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

மேலும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இயக்குனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றையும் அளித்தனர். அதன்பின் அவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். டாக்டர்கள் போராட்டம் காரணமாக ஜிப்மர் வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story