கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை: ஆக்சிஜன் வசதியோடு கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்த வேண்டும் மத்திய நிபுணர்கள் குழு வலியுறுத்தல்
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் வசதியோடு கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் மத்திய நிபுணர்கள் குழு வலியுறுத்தி உள்ளது.
புதுச்சேரி,
புதுவை மாநிலத்தில் கொரோனா மேலாண்மை மற்றும் தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் பொது சுகாதார இயக்குனரகம் நிபுணர் குழுவை அமைத்தது. இந்த குழுவில் ஜிப்மர் சமுதாய மருத்துவத் துறை தலைவர் சோனாலி சர்க்கார், மைக்ரோ பயாலஜி துறை பேராசிரியர் சுஜாதா, சுவாச மருத்துவத்துறை பேராசிரியர் சகா வினோத்குமார் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் சென்னை தேசிய நோய் தொற்று அறிவியல் மையத்தின் துணை இயக்குனர் மற்றும் விஞ்ஞானி பிரப்தீப் கவுர் தலைமையில் விஞ்ஞானிகள் கணேஷ் குமார், நேசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் கடந்த வாரம் புதுவை வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த நிலையில் மத்திய நிபுணர்கள் குழுவினர் நேற்று காலை கவர்னர் மாளிகைக்கு சென்றனர். அங்கு கவர்னர் கிரண்பெடியை சந்தித்து புதுச்சேரியில் தற்போது உள்ள நிலவரம் குறித்தும், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கி கூறினர். அப்போது புதுவை மாநிலத்தில் மேற்கொண்ட ஆய்வின்படி 95 சதவீதம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கலாம். புதுவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு 1,000 என்ற அளவில் சோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். ஒவ்வொரு தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் 100 ஆக்சிஜன் படுக்கை வசதிகளும், 200 படுக்கை வசதிகளும் ஏற்படுத்த வேண்டும் என்று கூறினர்.
ஆலோசனை
தொடர்ந்து நேற்று மதியம் அவர்கள் சட்டசபை வளாகத்திற்கு சென்றனர். அங்கு முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளரும், மாவட்ட கலெக்டருமான அருண், இயக்குனர் மோகன்குமார் மற்றும் மத்திய நிபுணர்கள் குழுவினர் கலந்துகொண்டனர்.
அப்போது அவர்கள், “புதுவை அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை பார்வையிட்டு அரசு சரியாக இருப்பதாக கூறினர். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு சரியான பார்வையில் செல்வதாக கூறினர். கொரோனா வைரசின் பாதிப்பு இன்னும் நீண்ட காலம் தொடரக்கூடியது. இந்த சவாலை எதிர்கொள்ள அரசு முனைப்போடு செயல்பட வேண்டும். பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
ஆக்சிஜன் வசதியோடு படுக்கைகள் இருக்க வேண்டும். சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்க வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும். கொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு வேறு என்னென்ன பாதிப்புகள் என கண்டறிந்து அதற்கும் தீவிர சிகிச்சை அளிக்கும் போது இறப்புகளை குறைக்க வழிவகுக்கும்” என்று வலியுறுத்தினர்.
மருத்துவக்கல்லூரி
இது தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) முதல்-அமைச்சர் நாராயணசாமி, அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி அதிகாரிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்த உள்ளார்.

Related Tags :
Next Story