நெல்லையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயற்சி: 10 டன் ரேஷன் அரிசி, லாரியுடன் பறிமுதல் டிரைவர் கைது


நெல்லையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயற்சி: 10 டன் ரேஷன் அரிசி, லாரியுடன் பறிமுதல் டிரைவர் கைது
x
தினத்தந்தி 3 Sep 2020 1:28 AM GMT (Updated: 3 Sep 2020 1:28 AM GMT)

நெல்லையில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவரும் கைது செய்யப்பட்டார்.

செங்கோட்டை,

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள தமிழக, கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள புளியரை சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

அப்போது சரக்கு லாரி ஒன்று வேகமாக வந்தது. இதனை பார்த்த போலீசார் சந்தேகம் அடைந்து லாரியை நிறுத்தி சோதணை செய்தனர். அப்போது லாரியில் கேரளாவுக்கு கடத்துவதற்காக 10 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

டிரைவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கன்னியாகுமரி அருகே உள்ள கடக்கல் இடத்தை சேர்ந்த யூசுப் ஜோசப் மகன் அருண் (வயது 23) என்பது தெரியவந்தது. இவர் நெல்லையில் இருந்து ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கொண்டு செல்வதாக கூறினார். பின்னர் லாரியுடன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் டிரைவர் அருணை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

சங்கரன்கோவில்

சங்கரன்கோவிலில் நியாயவிலைக் கடைகளுக்கு அரிசி வழங்கும் தனியார் அரிசி ஆலை உள்ளது. இங்கு நெல்லில் இருந்து அரிசியை பிரித்தெடுக்கும்போது கருப்பு நிற கழிவு அரிசி வெளியேறும். இந்த கருப்பு அரிசியை லாரியில் ஏற்றி நாமக்கல்லுக்கு கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே டவுன் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர். ராஜபாளையம் சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே சென்று கொண்டிருந்த லாரியை மடக்கிப்பிடித்து சோதனையிட்டனர்.அதில் ஆவணங்கள் எதுவுமின்றி சுமார் 16 டன் கருப்பு அரிசி இருப்பது தெரியவந்தது. விசாரணையில் கோழி தீவனத்திற்காக கருப்பு அரசி நாமக்கல் கொண்டு செல்வதாக தெரியவந்தது. இதுதொடர்பாக கும்பகோணத்தை சேர்ந்த லாரி டிரைவர் அய்யப்பனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். நீண்ட நேர விசாரணைக்கு பின்னர் போலீசார், லாரியுடன் கருப்பு அரிசியை பறிமுதல் செய்து வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Next Story